உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 2025 ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்களை நடத்துவதற்காக அறிவிக்கப்பட்டது. இந்த முகாம்களில், மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனு வடிவில் அளிக்கலாம். மேலும் அரசு அதிகாரிகள் அவற்றை உடனடியாக பரிசீலித்து தீர்வு வழங்குவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. சாதி சான்று, பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டை முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் இத்திட்டத்தின் மூலம், மக்களின் கோரிக்கைகளையும் புகார்களையும் நேரடியாகப் பெற்று, அவற்றை விரைவாகவும் வெளிப்படையாகவும் தீர்க்க அரசு முயற்சித்து வருகிறது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன, இதில் 13 அரசு துறைகள் மூலம் 43 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க வந்தவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடபதி என்ற முதியவர் மனு கொடுத்துவிட்டு ரசீது கேட்டுள்ளதாக தெரிகிறது. அவரை வருவாய் அலுவலர் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்டத்தில் அதிரடி திருப்பம்... திருப்புவனம் தாசில்தார் போலீசில் பரபரப்பு புகார்...!
மேலும் முதியவர் பிரச்சனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஐ. முதியவரிடம் வாக்குவாதம் செய்து அவரை நெஞ்சில் குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்.. கடுமையாக சாடிய அதிமுக..!!