விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு முன்னர், விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாடு மற்றும் மதுரை பாரபத்தியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாடு ஆகியவை கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த மாநாடுகளில், விஜய் சமூக நீதி, பெண்களுக்கான பாதுகாப்பு, மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தார், இது அவரது அரசியல் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.

அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் சுற்றுப்பயணங்கள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று நாகையில் விஜய் பிரச்சாரம் நடத்தினார். அப்போது விஜய் பிரச்சாரத்தின் போது, திமுக அரசை விமர்சித்து பேசினார். மேலும், அதிமுகவுக்கு மாற்று திமுக., இதுதான் காலம் காலமாக உள்ள தீர்ப்பு என தவெக தலைவர் விஜய் பேசி இருந்தார். திமுக - தவெக இடையேதான் போட்டி என்றும் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: ஏலேய்… அண்ணன் வரேன்! மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் தீவிர ஆலோசனை
அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார். திமுகவுக்கு என்றுமே மாற்று அதிமுகதான் என்றும் அதிமுக, திமுக வரலாறுகளை விஜய் படிக்க வேண்டும் எனவும் கூறினார். புதிதாக வந்தவர்கள் பரீட்சை எழுதாமல் தேர்ச்சி பெறுவேன் என்று சொல்வது அவர்களின் நம்பிக்கை என்றும் இப்போதுதான் விஜய் படித்துக் கொண்டிருக்கிறார்., விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும் என தெரிவித்தார். மதிப்பெண் பெற்றபிறகு பேசலாம் என்றும் விஜய் பரப்புரை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
இதையும் படிங்க: இப்போ WFH தலைவர் இல்ல.. WEEKEND தலைவர்.. விஜயை கலாய்த்த தமிழிசை..!!