இரண்டாவது முறையாக தமிழக பொறுப்பு ஆளுநருடன் விஜய் சந்திப்பு நடத்தி இருக்கும் நிலையில் சில விளக்கங்களை விஜய் இடம் ஆளுநர் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 40 நிமிடங்கள் ஆளுநருடன் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில் எப்போது விஜய் ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஆட்சியமைக்க விஜயை அழைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிறகு, அவரது பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் அமோக வெற்றியை பெற்றது.

இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கு 118 எம்எல்ஏக்கள் தேவை எனும் நிலையில் காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணியை திமுகவுடன் முறித்துக் கொண்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது. இதன் மூலம் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. இருப்பினும் பெரும்பான்மைக்கு 5 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் விஜய் தமிழக முதலமைச்சர் ஆக பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜயை முதல்வர் ஆக்காம போக மாட்டோம்..! நேரு ஸ்டேடியம் வெளியே கண்ணீர் விட்டு அழும் தொண்டர்கள்..!!
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கேட்டும் இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை. சட்ட வல்லுனர்களுடன் ஆளுநர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்தார். தமிழ்நாடு பொறுப்பு ஆளுநருடன் இரண்டாவது முறையாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திப்பு நிகழ்த்தி இருப்பது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. விஜயை ஆட்சி அமைக்க அழைப்பாரா பொறுப்பு ஆளுநர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 பேரின் ஆதரவு தேவை எனும் நிலையில் ஆளுநர் சில விளக்கங்களை விஜயிடம் கேட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. சுமார் 40 நிமிடங்கள் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன், விஜய் சந்தித்து பேசி இருந்தார். சந்திப்பு நிறைவடைந்த பிறகு விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 118 பேர் ஆதரவு தேவையா? விஜய் போடும் மாஸ்டர் ப்ளான்! ஆட்சி அமைப்பது உறுதி