தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் இலங்கையின் வடக்கு கடற்கரையில் திரிகோணமலை யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தற்போது இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழக கடலோர பகுதிகளில் காற்று வேகம் அதிகரித்துள்ளது. வங்க கடலின் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பதினொன்றாம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் 11ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் மீட்பு படைகள் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வெளுக்க போகுது. ! கனமழை எச்சரிக்கை... லிஸ்ட்ல சென்னையும் இருக்கு... முழு விவரம்..!
இதனிடையே, சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சும்மா வெளுக்கபோகுது... காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதாக அறிவிப்பு...!