கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் செம்மங்குப்பம் அருகே செல்லும்போது அந்த கேட் மூடப்படாத காரணத்தால் அந்த வழியாக வந்த தனியார் பள்ளிவேன் மீது மோதி இருக்கிறது. இந்த தனியார் பள்ளிவேன் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. இதிலிருந்த குழந்தைகளும் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். இந்த கோர விபத்தில் மாணவர் நிவாஸ் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சாருமதி (16) என்ற மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 2 பள்ளி குழந்தைகள் மற்றும் வேன் ஓட்டுநர் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் ரயில் பள்ளி வேனை 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. அப்படி இழுத்துச் செல்லப்பட்ட வேன் மோதியதில் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாங்கியதில் செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை நடந்த இந்த கோரவிபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING ரயில் மோதி சுக்கு நூறான பள்ளி வேன்.. நெஞ்சை உலுக்கும் கோரம்.. 2 மாணவர்கள் உட்பட 4 பேர் பலி..!
இந்த விபத்துக்கான காரணம் அந்த கேட் மூடப்படாததால் தான் அந்த வேன் அந்த வழியாக சென்றதாக சொல்லப்படுகிறது. கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதே இந்த கோர விபத்திற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கேட் கீப்பரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

விபத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், “கேட் மூடப்படாமல் இருந்ததே பள்ளி வேன் ரயில்வே கிராசிங்கை கடக்க காரணம். ரயில் வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. அதனால் சரியாக 7.40 மணி அளவில் பள்ளி வேன் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் சுமார் 50 மீட்டருக்கு பள்ளி வேனானது இழுத்துச் செல்லப்பட்டது. வேனில் ஓட்டுநர் உட்பட 5 பேர் இருந்தார்கள். ஒரு பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரு பள்ளி மாணவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார், ஆனால் அவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். மீதமுள்ள மாணவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூடாமல் உறங்கியதே விபத்திற்கான முக்கிய காரணம்” என்றார்.
இதையும் படிங்க: மோடி அரசின் 11 ஆண்டுகால சேவை.. எந்த மாற்றமும் இல்லை.. ராகுல் காந்தி கடும் தாக்கு..!