ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. காலில் ஏற்பட்ட சிறு காயத்தால் கடந்த போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் நிலவிய நிலையில், மகேந்திர சிங் தோனி தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதாகச் சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அடுத்த முக்கியமான போட்டிக்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீபன் பிளமிங் தோனி தற்போது முழு உடற்தகுதியுடன் (Fully Fit) இருக்கிறார். ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் அவர் விளையாடத் தயாராக உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில போட்டிகளாகத் தோனி களமிறங்கி அதிரடி காட்டுவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். குறிப்பாக, ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் அவர் விளாசும் சிக்ஸர்களைக் காணச் சென்னை மற்றும் ஹைதராபாத் ரசிகர்கள் இப்போதே மைதானத்தில் குவியத் தொடங்கிவிட்டனர்.
இதையும் படிங்க: சிஎஸ்கே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! ஏப்ரல் 26 சென்னை - குஜராத் போட்டி அகமதாபாத்தில் இருந்து இடமாற்றம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் இந்தப் போட்டி, புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது. தோனியின் அனுபவம் மற்றும் கேப்டன் ருதுராஜுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு சீசனில் தோனி எதிர்கொள்ளும் குறைவான பந்துகளிலேயே அதிக ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து வருகிறார். அவரது வருகை சென்னை அணியின் பேட்டிங் வரிசைக்குக் கூடுதல் வலு சேர்த்துள்ளது. தோனி மீண்டும் களமிறங்குவது உறுதியாகியுள்ளதால், சமூக வலைதளங்களில் #Dhoni மற்றும் #CSK போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!