வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து அர்னாப் புயலாக மாறியுள்ளது. இதனால் தமிழத்திற்கு பேராபத்து இல்லை என தெரிவித்துள்ள போதும், நேற்றைய நிலவரப்படி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு முதலே பல்வேறு பகுதிகளில் மழையானது கொட்டித்தீர்ந்து வந்தது. இன்று காலையும் நாகையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வந்தது.
தற்போதும் மழையின் தீவிரம் குறையாததால் மாணவர்களின் நலன் மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கே.ஜோ.பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள் சோதனை.! மெத்தபெட்டமைன் கடத்தல் புகாரில் அதிரடி.!
நேற்றிரவு முதலே மழை தொடர்ந்து வருவதால் கோவை, திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என நேற்றே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரக்கூடிய உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய தாலுக்காவில் இயங்கக்கூடிய பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் வட்டப் பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING விட்டாச்சு லீவு... தேனி, கள்ளக்குறிச்சியில் எந்தெந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை?