தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தொடர்ச்சியாக இன்று மழை விட்டு விளாசி வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் என பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றிரவு முதலே மழை தொடர்ந்து வருவதால் கோவை, திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என நேற்றே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரக்கூடிய உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய தாலுக்காவில் இயங்கக்கூடிய பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அதனையடுத்து கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING கொட்டித்தீர்க்கும் கனமழை... நீலகிரியில் இந்த 6 வட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை...!
புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுவை அமைச்சர் நமச்சிவாயம் இது தொடர்பாக கூறுகையில், நாளையும் புதுவை, காரைக்காலில் கனமழை எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி நாளை திங்கட்கிழமை புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் வட்டப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வட்டத்தில் உள்ள பொரசக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விருகாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சின்ன சேலம் வட்டம் ஈரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
இதையும் படிங்க: கடைசி நேரத்தில் இப்படியொரு ட்விஸ்ட்டா?... “ஸ்கூலுக்கு வராதீங்க”... இந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை...!