2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், 2009 முதல் 2015 வரை ஏழு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்காக விளையாடிய பிறகு மீண்டும் அந்த அணிக்குத் திரும்பினார்.

சென்னை அணி, 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கி, அவரது முழு அனுபவத்தைப் பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்த்தது. ஆனால், அஸ்வின் 9 போட்டிகளில் வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இந்த ஆண்டு, சிஎஸ்கே முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து தனது பயணத்தை முடித்தது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அஸ்வின் யூ டியூப் சேனல் பக்கத்தில்,ஹாய் அஷ்வின், தயவு செய்து எனது அருமையான சிஎஸ்கே குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள அஸவின், எனக்கு அணியின் நலன் முதன்மையானது.
இதையும் படிங்க: LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!

உங்கள் அனைவரையும் விட நான் அணியை மிகவும் நேசிக்கிறேன். நான் 2009 மற்றும் 2010 இல் அணியுடன் இருந்தேன். 7 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். முன்பு சிஎஸ்கேயுடன் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றிருக்கிறேன். நான் பட்டத்தை வென்றிருக்கிறேன். எனவே, இப்படி ஒரு சாம்பியன் அணியை இப்படி பார்க்கும்போது, முதல் முறையாக வருத்தமாக உணர்கிறேன். அதற்காகவே நான் ஒரு மூலையில் அமர்ந்து அழுகிறேன். அடுத்து என்ன செய்வது? இதுதான் எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு வலுவான கம்பேக் தருவேன். இந்த பயணத்தை வீணாக்கப் போவதில்லை. எனது கட்டுப்பாட்டில் உள்ளவற்றைப் பொறுத்தவரை நான் சரியாக செய்வேன். உங்களால் பந்து கொடுக்கப்பட்டால் நான் வீசுவேன், பேட் கொடுக்கப்பட்டால் நான் பேட்டிங் செய்வேன். நான் நிறைய கடின உழைப்பை மேற்கொண்டுள்ளேன், மேலும் எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்து, வேலை செய்ய வேண்டிய பகுதிகள் உள்ளன. பவர் பிளேயில் நான் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்துள்ளேன். அடுத்த ஆண்டு பவர் பிளேயில் வீசுவதற்கு, நான் மேலும் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!