2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி லக்னோ அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் மேத்தீவ்14 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் மிச்சல் மார்ஸ் ஐந்து சிக்சர், நான்கு பவுண்டரி என 37 பந்துகளில் 67 ரன்கள் விளாச மறுபுறம் பண்ட் தன்னுடைய பழைய அதிரடி காட்டினார்.

மூன்று சிக்சர், ஐந்து பௌண்டரி என 29 பந்துகள் எல்லாம் அரை சதத்தை பதிவு செய்தார். பண்ட் 54 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 61 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தார். இதில் 11 பௌண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் நிக்கோலஸ் பூரான் 13 ரன்கள் எடுக்க லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க: இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!

228 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் பட்டிதார் களமிறங்கினர். பில் சால்ட் 19 பந்துகளில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் பட்டிதாரும் 14 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய லிவிங்ஸ்டன் டக் அவுட் ஆனார். இதனால் ஆர்சிபி அணி ரன்களை குவிக்க தடுமாறியது, அப்போது வந்த விராட் கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்து விளாசினார்.

அவரது விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஒருபுறம் மயங்க் அகர்வால் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கும் நிலையில் மறுமுனையில் ஜித்தேஷ் சர்மா அபாரமாக ஆடி 33 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்ட்ரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: IPL 2025: மும்பையை பஞ்சராக்கிய பஞ்சாப்.. புள்ளிப் பட்டியலில் தரமான சிறப்பான சம்பவம்!!