இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 371 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயம் செய்திருந்தது. அதை இங்கிலாந்து அணி எட்டாது என நினைத்த நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அந்தப் பெரிய இலக்கை எட்டி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதை அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்திருந்த சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து உலக சாதனை ஒன்றை படைத்திருக்கின்றார்.

இதன் மூலம் நான்காவது நாள் தேநீர் இடைவேளையில் போது இந்திய அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் இரட்டை சதத்தால் 587 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தில் 64 ரண்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் தொடங்கியது. கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அரை சதம் அடித்த நிலையில் சுப்மன் கில் தொடர்ந்து ஒரு முனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் ரன்களை சேர்த்த அவர், இரண்டாவது இன்னிங்ஸிலும் 130 பந்துகளில் சதம் அடித்திருக்கின்றார். இதில் ஒன்பது பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிங்க: 2வது இன்னிங்ஸில் இந்திய அணி; ஹாரி புரூக்கால் பவுலர்களுக்கு நெருக்கடி... புஜாரா சொல்வது என்ன?

இதன் மூலம் கேப்டனாக முதல் நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று சதத்தை கில் அடித்து இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கில் படைத்திருக்கிறார். 1971 ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக படைத்த நிலையில் 54 ஆண்டுகள் கழித்து கில் இந்த சாதனையை செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் 148 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே டெஸ்டில் இரட்டை சதம் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் படைத்திருக்கின்றார்.

இதை போன்று ஒரே தொடரில் மூன்று சதம் அடித்த கேப்டன்கள் பட்டியலில் கில்லும் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு கவாஸ்கர் நான்கு சதமும் விராட் கோலி 3 சதமும் அடித்து இருந்தனர். இதேபோன்று ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கில் படைத்திருக்கின்றார். இதற்கு முன்பு கவாஸ்கர் 344 ரன்கள் அடித்திருந்த நிலையில் சுப்மன் கில் 369 ரன்கள் அடித்து இருக்கின்றார். இதேபோன்று ஒரு டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை அவர் படைத்திருக்கின்றார். இதே போன்று கேப்டனாக முதல் 4 இன்னிங்சில் 524 ரன்கள் குவித்து கில் மற்றொரு உலக சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!