இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 10 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இதனிடையே முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றும் படி இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி முற்றிலும் ஆடுகளம் வேறு மாதிரியாக இருக்கும்.

இதனால் இந்திய அணி தங்களுடைய திட்டத்தையும் அதற்கு ஏற்ப மாற்றி இருக்கின்றது. பந்துவீச்சுக்கு சாதகமே இல்லாத ஆடுகளத்தில் தான் பவுலர்கள் தடுமாறுவார்கள். இதனால் கூடுதல் பவுலர்கள் 20 விக்கெட்டுகளையும் எடுக்க தேவைப்படுவார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் மைதானங்களில் பேட்டிங்கை தான் வலுப்படுத்த வேண்டும். ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை விரைவாக இழந்து விடுவார்கள். இதன் காரணமாக அணியால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாது. இதனை புரிந்து கொண்டுள்ள பயிற்சியாளர் கம்பீர் இந்திய அணியின் பேட்டிங்கை வலுவாக்க முடிவெடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த சுப்மன் கில்!!

அதன்படி ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை. இதனால் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதில் மீண்டும் சாய் சுதர்சன் சேர்க்கப்படுவார். சாய் சுதர்சன் அணிக்கு திரும்புவதன் மூலம் பேட்டிங் மேலும் வலுப்பெறும். இதேபோன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத பும்ரா மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அணிக்கு திரும்புவார். பிரசித் கிருஷ்ணாவின் இடத்தில் பும்ரா விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த இரண்டு மாற்றங்களில் கண்டிப்பாக ஒரு மாற்றம் நிச்சயம் நடைபெறும்.

ஒருவேளை முகமது சிராஜிக்கு உடல் அளவில் சோர்வு ஏற்பட்டிருந்தால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஆர்ஸ்தீப் சிங் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகம் ஆவார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கருண் நாயர் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும் அவருடைய ஸ்லீப் கேட்ச் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில், ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், ஜடேஜா, நிதிஷ் குமார், பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்/ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இதையும் படிங்க: 2வது இன்னிங்ஸில் இந்திய அணி; ஹாரி புரூக்கால் பவுலர்களுக்கு நெருக்கடி... புஜாரா சொல்வது என்ன?