சென்னை: உலக கால்பந்து ‘கோட்’ என்று அழைக்கப்படும் லியோனெல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகிறார்! 2022 FIFA உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி, ‘GOAT Tour of India 2025’ என்ற 3 நாள் சுற்றுப்பயணத்துக்காக டிசம்பர் 13 அன்று இந்தியாவை அடைகிறார்.
இது 2011-க்குப் பிறகு அவரது இரண்டாவது இந்தியா வருகை. கோல்கட்டாவில் 70 அடி உயர சிலை திறப்பு, ஐதராபாத்தில் நட்புப் போட்டி, மும்பையில் ரேம்ப் வாக், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு – இதெல்லாம் அவரது செட்யூல். 38 வயது மெஸ்ஸியின் இந்தியா டூர், ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
மெஸ்ஸி யாரு? ஏன் இந்தியா வர்றாரு?
லியோனெல் மெஸ்ஸி – அர்ஜென்டினாவின் கால்பந்து இறைவன். 8 தடவை பால் டி’ஓர் வென்றவர், இன்டர்மியாமி அணியில் விளையாடுபவர். 2022-ல் கத்தாரில் அர்ஜென்டினாவை உலகக் கோப்பைக்கு அடிச்சுத் தந்தவர். கேரளாவில் அர்ஜென்டினா அணியுடன் நட்புப் போட்டி நடக்கும் என்று 2024-ல் ஏற்பாடு ஆனது, ஆனால் ரத்து ஆயிடுச்சு.
இதையும் படிங்க: KSCA தேர்தலில் வெற்றி..!! தலைவரானார் முன்னாள் கிரிக்கெட் வீரர்..!! யார் தெரியுமா..??
இப்போ ‘GOAT Tour 2025’ என்று புரோமோட்டர் சதத்ரு துத்தா ஏற்பாடு செய்திருக்கார். மெஸ்ஸி இன்ஸ்டாகிராம்ல “இந்தியா எனக்கு ரொம்ப ஸ்பெஷல் நாடு”னு சொல்லி உறுதிப்படுத்தினார். அவரோட நீண்டகால நண்பர்கள் – உருக்வேயின் லூயிஸ் சுவாரெஸ், அர்ஜென்டினா மிட்ஃபீல்டர் ரோட்ரிகோ டி பால் – மூணு பேரும் சேர்ந்து வர்றாங்க.
முதல் நாள்: கோல்கட்டா – ‘மெஸ்ஸி மேனியா’!
டிசம்பர் 13 அதிகாலை 1:30 மணிக்கு மெஸ்ஸி இந்தியாவை அடைகிறார். கோல்கட்டாவின் E.M. Bypass-ல உள்ள 5-நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். காலை 9:30 முதல் 10:30 வரை ஸ்பான்சர்கள் சந்திப்பு. பிறகு இந்தியா-அர்ஜென்டினா உணவு திருவிழா – அர்ஜென்டினா மேட் டீ, இந்திய அசம் டீ, பெங்காலி ஃபிஷ், சুইட்ஸ் எல்லாம் நடக்க உள்ளது.

அடுத்து, லேக் டவுன் ஸ்ரீபூமியில் 70 அடி உயர மெஸ்ஸி சிலை திறப்பு – இது உலகின் மிகப்பெரிய விர்ச்சுவல் ஸ்டேட்யூ! சால்ட் லேக் ஸ்டேடியத்தில் 70,000 ரசிகர்கள் கூடும் GOAT கான்சர்ட், GOAT கப் – இதுல மெஸ்ஸி, சவுரவ் கங்குலி, லீண்டர் பேஸ், ஜான் அபிரஹாம், பைசுங் பூட்டியா போன்ற இந்திய ஸ்டார்கள் பங்கேற்கிறாங்க. மதியம் 2:00 மணிக்கு ஐதராபாத் செல்கிறார். இரவு 7:00 மணிக்கு ஐதராபாத் மைதானத்தில் நட்புப் போட்டி (மெஸ்ஸி, சுவாரெஸ், டி பால் ஆல் ஸ்டார்ஸ் vs இந்திய யூத் டீம்)
இரண்டாவது நாள்: மும்பை – ரேம்ப் வாக் ராக்கெட்!
டிசம்பர் 14-ல் மும்பை. மாலை 5:00 மணிக்கு வான்கடே ஸ்டேடியத்தில் நிகழ்ச்சிகள் தொடங்கும். முன்னதாக கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவில் பேடல் கோப். இரவில் 45 நிமிட ‘பேஷன்’ நிகழ்வு நடைபெற உள்ளது. – மெஸ்ஸி, சுவாரெஸ், டி பால் ரேம்ப் வாக் செய்ய உள்ளனர்.!
ஷாருக் கான், எம்.எஸ். தோனி, சசின் டெண்டுல்கர் போன்ற பாலிவுட், கிரிக்கெட் ஸ்டார்கள் கலந்துகொள்ளலாம். உலகக் கோப்பை மெமரபிலியா ஆக்ஷன் – மெஸ்ஸியின் ஜெர்ஸி, பந்து எல்லாம் விற்பனைக்கு வைக்கப்படும். இது சாரிட்டி நிகழ்வு – யூத் ஃபுட்பால் டெவலப்மென்டுக்கு பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நாள்: டெல்லி – மோடி சந்திப்பு!
டிசம்பர் 15-ல் டெல்லி. காலைல பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திப்பு – ஃபுட்பால், யூத் டெவலப்மென்ட் பத்தி பேச்சு நடக்கும். பிறகு 2:15 மணிக்கு ஃபெரோஷா கோட்லா ஸ்டேடியத்தில் GOAT கான்சர்ட், GOAT கப். விராட் கோலி, ஷுப்மான் கில் போன்றோர் வரலாம். மினர்வா அகாடமி யூத் டீம்களுக்கு ஃபெலிசிடேஷன் – யூரோப்பியன் சக்சஸ் கொண்டாட்டம். டூர் இங்கேயே முடியும்.
இந்த டூர் ரசிகர்களுக்கு ‘ட்ரீட்’! டிக்கெட் விலை 500-லிருந்து 50,000 வரை – கோல்கட்டாவில் 75,000 சீட்ஸ். செக்யூரிட்டி டைட் – மெஸ்ஸி டீம், இந்திய போலீஸ் சேர்ந்து. கேரளா போட்டி ரத்தான பிறகு இது மெஸ்ஸி ரசிகர்களின் கனவு நிறைவேறல். மெஸ்ஸி சொன்னார்: “இந்தியாவின் கால்பந்து பாஷன் என்னை ஈர்க்குது. புது ஜெனரேஷனோட சந்திப்பு ரொம்ப ஸ்பெஷல்!” இந்த 3 நாள் டூர் இந்திய கால்பந்தை பூஸ்ட் பண்ணுமா? ரசிகர்கள் காத்திருக்கிறாங்க!
இதையும் படிங்க: 'HE IS BACK'..!! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20..!! மீண்டும் அணியுடன் கைகோர்த்த சுப்மன் கில்..!!