ஆப்பிளின் முதல் மடிக்கும் ஐபோன் டுயோ வெளியானதும், ரஷ்ய ஆடம்பர பிராண்ட் கேவியர் அதன் ஸ்டெர்லிங் வெள்ளி பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக மாறியுள்ளது.
செப்டம்பர் 9, 2026 அன்று ஆப்பிள் நிறுவனம் தனது நீண்டகால எதிர்பார்ப்புக்குரிய முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை ‘ஐபோன் டுயோ’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இது ஆப்பிளின் வரலாற்றிலேயே மிக விலை உயர்ந்த ஐபோன் மாடலாகும். அமெரிக்காவில் டாலர் 1,999 (சுமார் ரூ. 1.90 லட்சம்) ஆரம்ப விலையில் வெளியான இந்த மாடல், இந்தியாவில் இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி காரணமாக ரூ. 2,99,900 முதல் விற்கப்படுகிறது.
512 ஜிபி பதிப்பு ரூ. 3,24,900, 1 டிபி ரூ. 3,74,900 மற்றும் 2 டிபி ரூ. 4,49,900 வரை உள்ளது. பாஸ்போர்ட் அளவில் மடிக்கும்போது 5.4 இன்ச் வெளிப்புற திரையும், திறக்கும்போது 7.6 இன்ச் உள் திரையும் கொண்ட இந்த ஃபோன், டைட்டானியம் ஃபிரேம், ஏ20 புரோ சிப், ஐபி68 தூசி-நீர் எதிர்ப்பு மற்றும் ஸ்டார் ஒயிட், நைட் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. அக்டோபர் 16 முதல் முன்பதிவு தொடங்கி அக்டோபர் 23 அன்று விற்பனைக்கு வருகிறது.
இதையும் படிங்க: ஐபோன் விலைக்கே புதிய மேக் மினி? ஆப்பிளின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!!
இந்த ஆடம்பர ஐபோனை இன்னும் உயர் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது கேவியர் பிராண்ட். அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள ‘லிக்விட் மெட்டல்’ பதிப்பு முழுவதும் ஸ்டெர்லிங் வெள்ளியால் தயாரிக்கப்பட்டுள்ளது. சிற்பம் போன்ற புடைப்பு வடிவமைப்புடன் கண்ணாடி போன்ற பளபளப்பான மெருகூட்டல் கொண்ட இந்த மாடல், மடிக்கும்போது தடையற்ற உலோக அமைப்பாக மாறுவதாக பிராண்ட் விளக்குகிறது.

ஆப்பிளின் மடிப்பு வடிவமைப்பிலிருந்து உத்வேகம் பெற்ற இந்த கஸ்டம் பதிப்பு, உலகளவில் வெறும் 17 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள லிமிட்டெட் எடிஷன் ஆகும். விலை விவரம் பிரமிக்க வைக்கிறது. 256 ஜிபி பதிப்பு டாலர் 18,840 (சுமார் ரூ. 18.08 லட்சம்), 512 ஜிபி டாலர் 19,200 (ரூ. 18.43 லட்சம்), 1 டிபி டாலர் 19,910 (ரூ. 19.11 லட்சம்) மற்றும் உயர்மட்ட 2 டிபி பதிப்பு டாலர் 21,340 (ரூ. 20.48 லட்சம்) வரை உள்ளது.
சாதாரண ஐபோன் டுயோவை விட சுமார் பத்து மடங்கு அதிக விலை கொண்ட இந்த வெள்ளி ஃபோன், கோடீஸ்வரர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆப்பிளின் தொழில்நுட்ப புதுமையையும், ஆடம்பரத்தின் உச்சத்தையும் ஒரே சாதனத்தில் இணைத்துள்ள இந்த லிக்விட் மெட்டல் ஐபோன் டுயோ, ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: 2026-ல் ஆப்பிளின் மிகப்பெரிய iPhone அப்டேட்.. புதிய மாடல்கள், விலை, முக்கிய அம்சங்கள் இதோ..!!