கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா. சினிமாவைத் தாண்டி சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாகக் கூறும் சிறப்பு கொண்டவர் தான் இவர. சமீப காலமாக, சமூக வலைதளங்கள் மூலமாக பல முக்கிய நிகழ்வுகள் மற்றும் சமூக நியாயங்களைப் பற்றிய தனது பார்வையை மக்களுடன் பகிர்ந்து வருகிறார். இப்படி இருக்க சமீபத்தில், கன்னட திரையுலகை உலுக்கிய சித்ரதுர்கா ரேணுகா சாமி கொலை வழக்கில், பிரபல நடிகர் தர்ஷன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நிலையில், நடிகை ரம்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை பகிர்ந்திருந்தார்.
இவர் பதிவு செய்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, அதற்கு எதிர்வினையாக சிலர், குறிப்பாக தர்ஷன் ரசிகர்கள் மற்றும் சில அடையாளம் தெரியாத பயனர்கள், ரம்யாவின் பக்கத்தில் அவதூறு, ஆபாச, மற்றும் தகாத வார்த்தைகள் கொண்ட கருத்துகளை பதிவிட்டனர். இந்த நிலையில், நடிகை ரம்யா பெங்களூரு மத்திய மண்டல சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சமூக வலைதளங்களில் இரக்கமின்றி திட்டிய, மாநில மற்றும் மத்திய சைபர் சட்டங்களை மீறி கமென்ட் செய்த 48 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்படி இருக்க இதுவரை சித்ரதுர்கா, கோலார், கங்காதர், மற்றும் ஓபண்ணா ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது ஐ.டி. ஆக்ட், பெண்களுக்கு எதிரான அவமதிப்பு சட்டங்கள், மற்றும் அதிகார வலைதளங்கள் மீதான தவறான பயன்பாடு தொடர்பான பிரிவுகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சமீபத்தில், இந்த வழக்கில் மறைந்த நிலையில் இருந்த ஐந்தாவது நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபர், தனது போலி இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தி, நடிகை ரம்யாவை பற்றி கொடுமையான, புண்படுத்தும் படியாக மற்றும்தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதுவரை, இவ்வழக்கில் மொத்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மீதமுள்ள 43 நபர்களின் அடையாளங்களை கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஒரு பெண் நடிகை, தனது கருத்தை வெளிப்படுத்தும் போதே, அதற்கு எதிராக இணைய வெறுப்பு மற்றும் பாலியல் ரீதியிலான அவமதிப்புகள் தாண்டி தாக்குதல்கள் நடப்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: "கூலி" படத்தில் கதாநாயகி கொலை செய்யப்படுவாரா..! நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்..!
ரம்யா குறித்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆன்லைன் பயமுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஒருமுறை முன்னிறுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடிகை ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கருத்து சொல்லும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமையை தவறாக பயன்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் சட்டம் ஒரு பதில் சொல்கிறது" எனக்கூறியுள்ளார். இது போன்ற நடவடிக்கைகள், இனி சமூக வலைதளங்களில் தனிப்பட்ட அவதூறுகள் மற்றும் பாகுபாடான கமென்ட்கள் தடுக்கப்படுவதை ஊக்குவிக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆகவே நடிகை ரம்யா தனது சமூக கருத்தை சொல்லும் உரிமையை பயன்படுத்தியதற்காக தன்னையும், பெண்களையும் குறிவைத்து நடக்கும் ஆன்லைன் தாக்குதல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருவது பிரமிக்க வைப்பதாக மட்டுமல்லாமல் பெருமை அளிக்கும் விஷயமாகும்..

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள், ஐ.டி சட்டத்தின்கீழ், தவிர்க்க முடியாத கடும் நடவடிக்கைகள் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்பதையும் இந்த சம்பவம் உறுதியாக காட்டுகிறது.
இதையும் படிங்க: அதிரடியாக வெளியாகிறது நடிகர் ராகவா லாரன்ஸின் 'புல்லட்' டீசர்..!