தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், தனது திரைப்படங்களின் வெற்றிகளை தாண்டி, கார் பந்தய உலகிலும் தனது தனித்துவத்தை காட்டி வருகிறார். நடிப்புக்குப் பிறகு இரண்டாவது ஆர்வமாக மாற்றியுள்ள மோட்டார் ரேசிங், தற்போது அவர் முழுமையாக ஈடுபட்டுள்ள துறையாக விளங்குகிறது. 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியதையடுத்து, அஜித் குமார் சினிமாவிலிருந்து ஒரு தற்காலிக இடைவேளையை எடுத்துக்கொண்டு, முழு நேர ரேஸ் ஓட்டுநராக களம் இறங்கியுள்ளார். இவரது சொந்த நிறுவனமான 'Ajith Kumar Racing' தற்போது சர்வதேச ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று, இந்தியாவின் நற்பெயரை உயர்த்தி வருகிறது. அதன்படி அஜித் குமார் ரேசிங் நிறுவனம் கடந்த காலங்களில் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பல கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளது.
இந்த போட்டிகளில் அவரது அணி பல வெற்றிகளை பெற்றும், ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த அனுபவங்களின் பின்னணியில், தற்போது அஜித் குமார் தனது அடுத்தபடியாக 'ஆசிய லீ மான்ஸ்' போட்டிக்காக தயாராகிறார். இந்த போட்டி, ஆசியாவின் மிக பிரபலமான தொடராக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் (F1) ஓட்டுநராக புகழ்பெற்ற நரேன் கார்த்திகேயன், தற்போது அஜித் குமார் ரேசிங் அணியில் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, 'Ajith Kumar Racing' அமைப்பின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் " நரேன் கார்த்திகேயனை அஜித் குமார் ரேசிங் அணிக்கு வரவேற்கும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம். நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயத்தில் பங்கேற்பது நமக்கு ஒரு பெருமை. நரேனுடன் சேர்ந்து ஆசிய லீ மான்ஸ் தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாகும்" என பகிரப்பட்டுள்ளது.

இப்படியாக அஜித் குமாரின் இந்த உரை, அவருக்கும் நரேனுக்கும் இடையே உள்ள நெருக்கத்தையும், புரிதலையும் வெளிப்படுத்துகிறது. இந்த புதிய கூட்டணியைப் பற்றிய தனது பார்வையை பகிர்ந்த நரேன் கார்த்திகேயன்.. "நான் அஜித்தை பல ஆண்டுகளாக நன்கு அறிந்தவன். இப்போது அவர் ஒரு தொழில்முறை ஓட்டுநராக களமிறங்குவது அற்புதமான விஷயம். 'ஆசிய லீ மான்ஸ்' தொடரில் அவருடன் இணைந்து பங்கேற்பது எனக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. எதிர்காலத்தில் இது ஒரு சிறப்பான பயணமாக அமையும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார். இப்படி இருக்க Ajith Kumar Racing Team, இப்போது “Proudly representing India in the Asian Le Mans Series” எனும் அடையாளத்துடன் பங்கேற்க தயாராகியுள்ளது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் இந்தியா சார்பாக தரமான பங்கேற்பு, தொழில்நுட்ப முன்னேற்றம், மற்றும் உண்மையான போட்டி ஆவல் ஆகியவற்றை கொண்டு முன்னேறும் அணியாக உருவாகும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியில் பேச முடியாது என்ன பண்ணுவீங்க..! மாநில விருது விழாவில் நடிகை கஜோலை சூடேற்றிய பத்திரிக்கையாளர்..!
அஜித் மற்றும் நரேன் கூட்டணியால் இந்த தடம் இன்னும் பல புதிய முன்னேற்றங்களை அடையும் என இந்தியா முழுவதும் உள்ள மோட்டார் ரேசிங் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவுத்துள்ளானர். அஜித் குமார், கடந்த சில ஆண்டுகளாகவே மோட்டார் ரேசிங் பந்தயங்களில் ஆர்வம் காட்டி வந்தவர். அவர் பங்கேற்ற மோட்டோஸ் போர்ட் இவெண்ட்கள், டிரைவராக கண்டுபிடித்துள்ள முன்னேற்றங்கள், மற்றும் அவரது எளிமையான அணுகு முறைகளால், திரைத்துறையைத் தாண்டி விளையாட்டு துறையிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். இப்போது இந்தியாவின் மிகச் சிறந்த ஓட்டுநர்களில் ஒருவரான நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து செயல்படுவதை ரசிகர்கள் மட்டும் அல்லாமல் மோட்டார் ரேசிங் உலகமும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றது. மொத்தத்தில் அஜித் குமார் மற்றும் நரேன் கார்த்திகேயன் என்ற இரண்டு ஜாம்பவான்களும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். அவர்கள் இணைந்து ஆசிய லீ மான்ஸ் தொடர் பந்தயத்தில் பங்கேற்கும் இந்தத் தகவல், கார் பந்தய உலகத்தில் ஒரு முக்கியத் திருப்பமாக காணப்படுகிறது.

சினிமா ரசிகர்களுக்கும், விளையாட்டு ஆர்வலர்களுக்கும் இது ஒரு பெரும் பெருமை தரும் செய்தியாகும். இந்தியா சார்பாக தயாராகும் 'Ajith Kumar Racing' அணி, உலக ரேசிங் மேடையில் இந்தியா என்ற நாடு தரம் மற்றும் தைரியத்துடன் பங்கேற்கக்கூடிய இடத்தை உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதையும் படிங்க: டபுள் ஆக்ஷனில் நடிகர் அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’..! இன்று மாலை மாஸ் திரைப்படத்தின் டீசர் வெளியீடு..!