தன்னுடைய திறமையை முதலீட்டாக வைத்து இன்று தனக்கென ரசிகர்களை உருவாக்கி, சினிமா துறையில் தன் கால் தடத்தை பதித்தவர் தான் கேப்ரில்லாசெல்லஸ். இவர் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சரத் மற்றும் தீனாவுடன் சந்திரமுகி கதாபாத்திரம், பேய் பிடித்ததை போன்ற கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமையை காண்பித்தார்.

அதன் பின் தனது சமூகவலையத்தள பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்து பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். இதனால் அவரது நடிப்பின் ஆர்வத்தை கண்ட இயக்குநர்கள், நயன்தாராவின் ஐரா, ரஜினியின் கபாலி, காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ள சம்பத் ராமுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

இதனை அடுத்து 2021ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் சுந்தரி தொடரில் கதாநாயகியாக அறிமுகமாகி கிராமங்கள், நகரங்கள் தோறும் உள்ள இல்லத்தரசிகளின் கனவு நாயகியாக மாறினார். இந்த சீரியல் 2023ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் கேபி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தைக்கு தாயாக போவதால், அதற்குண்டான ஓய்வு எடுக்க போவதாக கூறி தினமும் தான் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவு செய்து வந்தார்.

இந்த சூழலில், கேப்ரில்லா தனது வளைகாப்பு நிகழ்ச்சியை சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் மகிழ்ச்சியாக கொண்டாடினார். இந்த நிகழ்வுகளை வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தவருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

அதன்படி, வளைகாப்பு முடிந்த கையோடு தனது சொந்த ஊருக்கு சென்ற கேபிக்கு அழகான சின்ன தேவதை பிறந்துள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது மழலை மகளின் அழகிய பிஞ்சு கையின் புகைப்படத்துடன் " உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே…இவ்வுலகம் உனக்கானது மகளே..என்னுடைய அடி மனது நன்றியை @lalithanursinghometrichy தெரிவித்து கொள்கிறேன் சித்ரா அம்மா🙏🏽மருத்துவர்கள் செவிலியர்கள் இன்றி சுக பிரசவம் சாத்தியம் இல்லை, எனது அன்பு கொட்டி கொடுக்கும் எனது மக்களின் பிராத்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள்,

இந்த தருணத்திற்காக காத்து கொண்டு இருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிராத்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டி கொள்கிறேன்" என்ற வாக்கியங்களுடன் வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி மனோகரனுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு!