விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், தற்போது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் டாப் நம்பர் 1 சீரியலாக வலம் வருவது என்றால் அது ‘சிறகடிக்க ஆசை’ தான்.

ஒளிபரப்பு தொடங்கிய குறுகிய காலத்திலேயே TRP பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்த இந்த தொடர், அதன் கதைக்களம், பாத்திர அமைப்புகள் மற்றும் நடிகர்–நடிகைகளின் இயல்பான நடிப்பு ஆகியவற்றால் குடும்ப ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.

குறிப்பாக, தினமும் சீரியலை தவறாமல் பார்க்கும் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டதுபோல், ஒவ்வொரு எபிசோடும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படிங்க: லாரி கிளீனர்.. சாக்கடை கிளீனர்.. என நான் செய்யாத வேலையே இல்லை..! கண்கலங்கியபடி பேசிய நடிகர் சூரி..!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல், அண்ணாமலை – விஜயா தம்பதியின் குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு நகர்கிறது.

இவர்களின் மூன்று மகன்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், காதல், திருமணம், பொறுப்புகள் மற்றும் குடும்ப உறவுகளில் ஏற்படும் மோதல்கள் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

ஒரே வீட்டில் வாழும் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களின் மனநிலையை, இந்த தொடர் மிகவும் நெருக்கமாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தி வருகிறது. அதுவே இந்த சீரியலின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ப்ரீத்தி, எந்த விஷயமாக இருந்தாலும் தனக்கு தோன்றுவதை நேரடியாகவும் தைரியமாகவும் பேசும் ஒரு போல்டான கேரக்டரில் நடித்துவருகிறார்.

குடும்பத்தில் நடக்கும் அநீதிகள், தவறான முடிவுகள் அல்லது தேவையற்ற தலையீடுகள் ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுக்கும் கதாபாத்திரமாக அவர் உருவாக்கப்பட்டுள்ளார்.

இது வழக்கமான சீரியல்களில் காணப்படும் அமைதியான, பொறுமைசாலியான பெண் கதாபாத்திரங்களிலிருந்து சற்று மாறுபட்டதாக இருப்பதால், ரசிகர்களிடையே இந்த வேடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ப்ரீத்தியின் நடிப்பில் முக்கியமாக பேசப்படுவது, அவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும். தேவையற்ற மிகைப்படுத்தல் இல்லாமல், இயல்பான முகபாவனைகளுடன் அவர் அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பித்து வருகிறார். 
இதனால், “இந்த மாதிரி ஒரு பெண் நிஜ வாழ்க்கையிலும் இருந்தால் எப்படி இருக்கும்?” என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளார். சமூக வலைதளங்களில் கூட, ப்ரீத்தியின் கதாபாத்திரத்தை ஆதரித்து பல கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மலேசியாவில் ஸ்தம்பித்த சாலைகள்..!! 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவால் ரசிகர்கள் திருவிழா..!!