தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பார்ப்படுபவர் நடிகர் சூர்யா.. இவரது படங்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாதது. இப்படி இருக்க இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து தனது 45-வது திரைப்படமாக ‘கருப்பு’ என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பல காரணங்களால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, இப்படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.ஜே. பாலாஜி என்பது தான். அதுமட்டுமல்லாமல் எழுத்தாளர், நடிகர், வழிகாட்டி என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்திய பாலாஜி, இப்போது இயக்குநராக இந்தப் படத்தின் மூலம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இப்படி இருக்க, இந்த ‘கருப்பு’ படத்தை தயாரித்துள்ள நிறுவனமாக டிரீம் வாரியர் பிக்சர்ஸ், தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரிக்கும் நிறுவனம் என பேசப்படுகிறது. இப்படத்தில் சூர்யா ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு மிகவும் புதுமையான காட்சியாக அமையப்போகிறது. அவரது நடிப்புத் திறனை அதிகளவில் காண்பிக்கும் வகையில் இப்படத்தின் கதாபாத்திரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் சூர்யா மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கையில் மறுபக்கம் திரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2000-களில் தொடங்கிய இவர்களது ஜோடியானது பல வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் காணப் போகிறது என்பது ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷமாக உள்ளது. இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி மற்றும் அனகா மாயா ரவி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்-படத்தின் இசையை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வகுத்துள்ளார்.

அவரது பாணியில் இளைஞர்களை கவரும் மெட்டுகளும், கதையின் உணர்வை கட்டியெழுப்பும் பின்னணி இசையும் இடம் பெறுவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘கருப்பு’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டது. மிகச்சிறந்த விதமாக காட்சிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள், சூர்யாவின் வித்தியாசமான தோற்றம், நவீன படத்தோற்றம் ஆகியவை ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கின. டீசர் வெளியான சில மணி நேரத்திலேயே மில்லியன்களைக் கடந்த பார்வையாளர்களைப் பெற்றது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து டீசரை படக்குழுவினர் பார்த்து மகிழ்ந்தனர். இதில் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, நடிகர்கள் மற்றும் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஒரே பதிவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் விநாயகன்..! கோபத்தை கொட்டி தீர்த்த தொண்டர்கள்..!
அதில் ரசிகர்களிடம் நேரடியாக பேசிய பாலாஜி, "இந்த படத்துக்கு கிடைத்த முதல் விமர்சனமே எங்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. உங்கள் ஆதரவு எப்போதும் நம்மோடு இருந்துள்ளது. இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறோம்" என்று தெரிவித்தார். தமிழ் சினிமாவில் தீபாவளி ரிலீஸ் என்பது எப்போதும் ஒரு பெரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. தற்போது ‘கருப்பு’ படமும் அந்த விருந்துக்கான போட்டியிலும் இணைவதால், மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த படம் சமூக நீதி, சட்டம் மற்றும் உண்மை குறித்து பேசும் முக்கியமான திரைப்படமாக அமையப்போகிறது எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாம, சூர்யாவின் நடிப்பு, திரிஷாவுடனான கூட்டணி, ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கம் மற்றும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு என அனைத்தும் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும் என பேசப்படுகிறது. இளம் இசையமைப்பாளரின் இசையும் புதிய சுவையாக அமையப்போகிறது.

இப்படி இருக்க, தீபாவளிக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், 'கருப்பு' திரைப்படம் திருவிழா காலத்துக்கு ரசிகர்களுக்கான ஒரு உணர்ச்சிகரமான மற்றும் தரமான விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மறைந்த ஸ்ரீதேவிக்காக கணவர் விபரீத செயல்..! நினைத்ததை சாதித்த போனி கபூர்.. பார்க்க மனைவி இல்லை என வருத்தம்..!