தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது.
- சென்னை எம்.கே.பி. நகர் சரக ஏசிபி எம்.மதிவண்ணன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணைப் பிரிவு டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை மத்திய குற்றப்பிரிவு ஏசிபியாக இருந்த கே.வி.காவ்யா, திருச்சி மாவட்டம் மன்னார்குடி துணைப் பிரிவு டிஎஸ்பி நியமனம்
- கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பார்த்திபன், கடலூர் மாவட்டம் திட்டக்குடி துணைப் பிரிவு டிஎஸ்பியாக நியமனம்
- திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த எஸ்.பாலகிருஷ்ணன், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் துணைப் பிரிவு டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி பி.மகாலட்சுமி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்படி துணைப் பிரிவு டிஎஸ்பியாக நியமனம்
- சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு, சிஐடி, என். லட்சுமணன், சேலம் டிஎஸ்பி ரயில்வே போலீசாக மாற்றம்
- கோவை காட்டூர் சரகத்தைச் சேர்ந்த ஏசிபி டி.எச் கணேஷ், திருப்பூர் கொங்குநகர் சரக ஏசிபியாக நியமனம்
- திருப்பூர் கொங்குநகர் சரக ஏசிபியாக இருந்த எம்.வசந்தராஜ், ஈரோடு மாவட்டம் பெருந்துறை துணைப்பிரிவு டிஎஸ்பியாக நியமனம்
- ஈரோடு மாவட்டம் பெருந்துறை துணை பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய வந்த ஆர்.கோகுலகிருஷ்ணன் கோவை மாவட்டம் காட்டூர் சரக ஏசிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஸ்ரீரங்கம் சரக திருச்சி டிஎஸ்பி வி.எஸ்.எஸ். ஆனந்த் ஆரோக்கியராஜ், திருச்சி போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிஐடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: "ப" வகுப்பறை.. என்ன சொன்னாலும் நிறுத்த முடியாது! தமிழக அரசு திட்டவட்டம்..!