மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவரம் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தடா பெரும்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சியுரை மேற்கொண்டார்.
அப்போது இபிஎஸ் பேசியதாவது, “இன்னும் இரண்டு மாதம் தான்… ஏப்ரலில் தேர்தல் வரும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும். நம் கூட்டணி வலிமையானது அதிமுக தான் தலைமை. வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சி அமைக்கும், அதிமுக தலைவர் தான் முதல்வர். திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது. எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடம் என்று பிரச்னை. தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.
இரண்டு மாதம் முன்பு ஸ்டாலின் என்ன பேசினார்..? இபிஎஸ் கடையை விரித்து வைத்திருக்கிறார், யாரும் வரவில்லை என்றார். பலமான கூட்டணி அமைந்துவிட்டது. இது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்கு உருவான கூட்டணி. உங்கள் கூட்டணி அப்படியில்லை சுயநலம் நிறைந்த கூட்டணி. அதனால் தான் திமுகவின் நிலை தெரிந்து காங்கிரஸ் பங்கு கேட்கிறது, விசிக பட்டும் படாமலும், பங்கு இருந்தால் பரவாயில்லை என்று கேட்கிறார்கள்.
இதையும் படிங்க: தீவிரவாதிகளின் புகலிடமா தமிழகம்? பயமா இருக்கு..!! எஸ். பி. வேலுமணி ஆதங்கம்..!!
இப்போது புதிதாக ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. அந்தம்மா மாநாடு நடத்தியபோது, அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கிறது. அப்படிப்பட்ட கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன. நம் கூட்டணி ஒரே நிலைப்பாடு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும், மக்கள் விரோத திமுகவுக்கு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும். இதுதான் நம் கூட்டணிக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். லேட்டாக கூட்டணி அமைத்தாலும் லேட்டஸ்டா அமைத்த கூட்டணி.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா..? நாட்டு மக்களை ஏமாற்றும் திமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும். பல வாக்குறுதிகளைக் கொடுத்து இன்னும் பலவற்றை நிறைவேற்றவே இல்லை. திமுக வாக்குறுதியில் நான்கில் ஒரு பங்கு தான் நிறைவேற்றினர், வெள்ளை அறிக்கை கேட்டேன், பதிலில்லை.
இது கிராமங்கள் நிறைந்த பகுதி. விவசாயத் தொழிலாளிகள் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்று சொன்னார்கள் செய்யவில்லை. நாம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால் மத்திய அரசு 125 நாளாக உயர்த்தியது. ஆனால் திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள். பணிப் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இதை ரத்துசெய்ய முடியாது. ஊராட்சிக்கு பணியை தேர்வுசெய்ய அதிகாரம் கொடுத்துள்ளனர். ஊழியர்களுக்கு 15 நாளில் பணம் பட்டுவாடா செய்யப்படும். இதெல்லாம் செய்துகொடுத்தது மத்திய அரசு. அதிமுகவின் வேண்டுகோளை ஏற்று. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 125 நாள் 150 நாளாக உயர்த்தப்படும்.
10 அறிவிப்புகளை நான் அறிவித்தேன். குடும்பத் தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்போம். நாங்கள் அறிவித்ததால் பயந்துபோய் அவர் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார், ஏன் கோடை காலத்துக்கு முன்பு கொடுக்கவில்லை.? மக்களை பற்றி சிந்தித்தார்களா? தேர்தல் வருவதால் வாக்கு தேவை அதனால் கொடுத்தனர். 2022, 23, 24, 25 நான்கு கோடைக் காலம் முடிந்தது, அப்போதெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை, உங்களுக்கு சும்மா கொடுக்கவில்லை, வாக்குக்கு விலை பேசி கொடுத்துள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: TWIST மேல TWIST..!! அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்..!!