குஜராத் மாநிலத்தின் 14 முக்கிய நகரங்களில் (ஜூன் 27, 2026) இன்று பாரத் டாக்ஸி சேவையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்தியாவில் கூட்டுறவு மாதிரியில் ஓட்டுநர்களே உரிமையாளர்களாக இருக்கும் முதல் டாக்சி முன்பதிவு தளமாக இது உருவாகியுள்ளது.
அகமதாபாத், சூரத், வடோதரா, ராஜ்கோட், ஜாம்நகர், பவ்நகர் உள்ளிட்ட நகரங்களில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை, விரைவில் முழு மாநிலத்துக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சஹகார் டாக்ஸி’ என்ற பெயரில் இயங்கும் இந்த கூட்டுறவு நிறுவனம், மல்டி-ஸ்டேட் கூட்டுறவு சொசைட்டி சட்டம் 2002-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், டாக்சி ஓட்டுநர்களை வெறும் தற்காலிக ஊழியர்களாக நடத்தாமல், நிறுவனத்தின் பங்குதாரர்களாக (shareholders) மாற்றுவதாகும்.
தனியார் டாக்சி நிறுவனங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் வசூலிப்பதற்கு மாறாக, பாரத் டாக்ஸியில் ஓட்டுநர்கள் தங்கள் பயண வருமானத்தின் 100 சதவீதத்தையும் முழுமையாகப் பெறுவார்கள். சர்ஜ் பிரைசிங் இல்லாத வெளிப்படையான கட்டண முறை, பயணிகளுக்கு மலிவான கட்டணம் மற்றும் ஓட்டுநர்களுக்கு நிலையான வருமானம் ஆகியவை இந்த சேவையின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.
இதையும் படிங்க: ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!
ஓட்டுநர்கள் ₹500 போன்ற சிறிய தொகையை முதலீடு செய்து பங்குதாரராக மாறலாம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனத்தின் இலாபத்தில் 80 சதவீதம் ஓட்டுநர்களின் பங்களிப்பு அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழாவில் உரையாற்றிய அமித் ஷா, “இன்று இந்திய போக்குவரத்துத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நாட்டின் வளர்ச்சியால் டாக்சி சேவை ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியமாகிவிட்டது. தனியார் நிறுவனங்களில் ஓட்டுநர்களும் பயணிகளும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சட்டங்கள் மட்டும் போதாது என்பதால் கூட்டுறவு மாதிரியை நோக்கி நகர்ந்தோம். இதன் மூலம் சுரண்டல் அடிப்படையிலான வணிக முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார்.
அமுல் கூட்டுறவு மாதிரியைப் போன்று இந்த திட்டம் ஓட்டுநர்களின் உரிமைகளையும் பொருளாதார மேம்பாட்டையும் உறுதி செய்யும். அடுத்த மூன்று ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த சேவை விரிவடையும் எனக் கூறப்படுகிறது. பைலட் திட்டத்திலேயே லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் மற்றும் பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த புதிய மாடல் இந்திய டாக்சி துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஓட்டுநர்களின் சமூக-பொருளாதார உயர்வு, பயணிகளுக்கு நம்பகமான மற்றும் மலிவு சேவை ஆகியவற்றை இணைக்கும் இந்த முயற்சி, கூட்டுறவு இயக்கத்தின் வெற்றிகரமான விரிவாக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நிதி, மின்சாரம்..!! இப்ப அடுத்த டார்கெட் பத்திரப்பதிவு..!! வெளியாகிறதா வெள்ளை அறிக்கை..??