தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமையவிருக்கிறது. இந்தத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே மீண்டும் உருவாகியுள்ள கூட்டணி முக்கிய பேசு பொருளாக உள்ளது. இந்தக் கூட்டணி, 2023 செப்டம்பரில் முறிந்த உறவை மீண்டும் புதுப்பித்து, தமிழ்நாட்டில் ஆளும் திமுகவை எதிர்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவும் பாஜகவும் கடந்த காலங்களில் பல தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன. 1998 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. ஆனால், 2023 செப்டம்பரில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் மறைந்த தலைவர்களான ஜெயலலிதா மற்றும் அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்ததாகக் கூறி, அதிமுக இந்தக் கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனால், 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியிடம் படுதோல்வியைச் சந்தித்தன.

இந்த நிலையில், மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு கட்சிகளும் ஒட்டி உறவாடி வருகின்றன. இந்த நிலையில், அதிமுகவை பாஜக எனும் பாம்பு விழுங்குவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்து உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில், தேர்தல் ஆணையத்தோடு கூட்டு சேர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகளை பாஜக அரசு பழிவாங்கிய வருவதாக குற்றம் சாட்டினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா சலுகைகளையும் கொடுத்து கடன் வழங்கிய வருவதாக தெரிவித்தார். 11 வருட மோடியின் ஆட்சியில் அராஜகம் தலை விரித்து ஆடுவதாக கூறினார்.
இதையும் படிங்க: “CHENNAI ONE”... அனைத்து பொது போக்குவரத்தும் ஒரே APP- ல்… முதல்வர் தொடங்கி வைக்கும் புதிய செயலி…!
முன்பெல்லாம் நீங்கள் போராடுவீர்கள், இப்போது போராடுவதே கிடையாது என்றும் திமுகவை அதிகம் தடவி கொடுத்து வருகிறீர்கள் என்றும் திமுக எங்களை விழுங்கிவிடும் என்று கூறுவதாகவும் கூறினார். ஆனால், பாஜக எனும் பாம்பு அதிமுகவை விழுங்கி விடும் என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: வரலாற்று தீப்பொறி! வீரமங்கை வேலு நாச்சியாரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்த முதல்வர்…