கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியான டெய்லர் ராஜா, சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1998, பிப்ரவரி 14-ஆம் நாள் கோயம்புத்தூர் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2,000 பேர் காயமடைந்தனர். 11 வெவ்வேறு இடங்களில் 12 கி.மீ. சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. 4 குண்டுகள் ஆர்.எஸ். புரம் என்ற இடத்திலும், இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ஒன்று கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிலும், மற்றொன்று உக்கடம் பகுதியிலும் வெடித்தன.
பாஜக தலைவர் எல். கே. அத்வானி உரையாற்றவிருந்த இடத்துக்கு 100 மீ. தூரத்திலேயே முதலாவது குண்டு வெடித்தது. இக்குண்டுவெடிப்புகளுக்கு அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: என் பொண்ணு ஶ்ரீகாந்திக்கு இப்போதைக்கு பதவி இல்ல... ஆனா அப்புறம்? ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்
இந்த வழக்கில் 188 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான், அயூப் ஆகிய 3 பேரை 28 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, சிலருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, பைப் வெடிகுண்டு பொருத்திய முக்கிய குற்றவாளியான டைலர் ராஜா என்பவர் தலைவரைவானார். கடந்த 28 ஆண்டுகள் ஆக தலைமறைவாக பதுங்கி இருந்த சாதிக் ராஜா (எ) டைலர் ராஜாவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். பலத்த பாதுகாப்புடன் அவரை கோவைக்கு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் காவலர்கள் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் கடும் நில அதிர்வு... குலுங்கிய கட்டடங்கள்... நடுங்கிப் போன மக்கள்!