தரமான கல்வி வணிகமாவிட்டது, நடுத்தர மக்களின் கைகளுக்கு கூட சிக்காத அளவிற்கு காஸ்ட்லி ஆகிவிட்டது என இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கதறி வரும் நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பிரபல பள்ளியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்க வசூலிக்கப்படும் கட்டணத்தை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் சிலேட்டும், பென்சிலும் இருந்தால் போதும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஈசியாக படித்து முடிவிடலாம். ஆனால் இப்போது பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றாம் வகுப்பிற்கு மட்டும் ஆண்டு கட்டணமாக 7 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை வசூலித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதை உங்களுக்கு நம்ப கஷ்டமாக இருக்கலாம்... நீங்கள் நம்பவில்லை என்றாலும் இதுதான் நிஜம். பெங்களூருவாசி ஒருவர் அந்த பள்ளியின் Official Fees Structure-யை சோசியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கிறார். அதில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 'ஆண்டு கட்டணம் 7,35,000 ரூபாய், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆண்டுக் கட்டணம் 7 லட்சத்து 75 ஆயிரம், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 11 லட்சம் கட்டணம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் திருப்பித் தர முடியாத டெபாசிட் அமொண்ட்டாக ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.600 கோடியைக் காட்டி தமிழக அரசை பிளாக் மெயில் செய்யும் மத்திய அரசு... பகீர் தகவலை பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!
சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த பதிவைப் பார்த்து நெட்டிசன்கள் கொதித்துப்போயுள்ளனர். இது அடிப்படை கல்விக்கு எதிரானது என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சாதி கொடிகள், டீ ஷர்ட்...உலகப்புகழ் பெற்ற கோயில் திருவிழாவில் பரபரப்பு முடிவு...!