2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. பல்வேறு கட்சியினரும் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தி வருகின்றனர். தேசிய முற்போக்கு திராவிட கழகம் தங்கள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு தேர்தல் நெருக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துவிட்டது. இன்னும் ஓரிரு மாதங்களை இருக்கும் நிலையில் தேமுதிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தேர்தல் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் திட்டங்கள் தொடர்பாகவும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது. 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற முடியவில்லை. எனவே இந்த முறை கூட்டணி குறித்து யோசித்து நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி நிலைப்பாடுகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: ராமதாஸை ஏமாற்றி பெட்டி, பெட்டியாய் சுருட்டிய அன்புமணி... அருள் எம்.எல்.ஏ. திடுக்கிடும் குற்றச்சாட்டு...!
இந்த நிலையில், தேமுதிக கூட்டணி குறித்து வரும் ஜனவரி 9ம் தேதிக்கு முன் அறிவிக்கலாம் அல்லது அதற்கு மேலும் கூட்டணி அறிவிப்பு தள்ளிப்போகலாம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சூழ்நிலையை பொறுத்து அறிவிப்பு வெளியாகும் என்றும் நாங்கள் இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும் எனவும் பிரேமலதா உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: நியாயமான கோரிக்கை தான்..! ஆசிரியர்கள் போராட்டத்திற்கு குரல் கொடுத்த சீமான்...!