வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். அதன்படி கேரளா, மேற்கு வங்கம், குஜராத், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் ஒவ்வோரு தேர்தலுக்கும் முன்னதாக நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியும் அதைத் தொடர்ந்து தேர்தல் பணியும் BLOகளை (Booth Level Officers) மிகக் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. இந்த அழுத்தமே கடந்த சில ஆண்டுகளாக பல BLOக்களைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவருகிறது.

மேலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகக் குறைவு. பலர் வீட்டில் இருப்பதில்லை. சென்றால் இப்போ வேண்டாம், பிறகு வாருங்கள்., செல்போனில் OTP வரவேண்டியிருப்பதால், அவர்கள் இல்லாவிட்டால் வேலை நிற்கிறது. இதனால் ஒரே வீட்டிற்கு ஐந்து முறை, பத்து முறை செல்ல வேண்டியிருக்கிறது இது போன்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: பேரதிர்ச்சி... கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு... காற்றில் கரைந்த கவிச் சிகரம்...!
இன்னொரு பக்கம் அதிகாரிகளின் அழுத்தமும் தாறுமாறாக இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். இதனால் BLO- க்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் எஸ் ஐ ஆர் பணியாள் ஏற்பட்ட பணிச்சுமையின் காரணமாக பி எல் ஓ அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது தற்கொலைக்கு தேர்தல் ஆணையமே காரணம் எனக்கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு ரிங்கு தரத்தார் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த ரிங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??