பாஜக கூட்டணியில் இணைவதற்காக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவின. தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்தும் பேசி வருவதாக கூறப்பட்டது. அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் விஜய் இணைய இருப்பதாக வெளியான தகவல் அரசியலில் பேசிப் பொருளாக மாறியது.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழகம் வாய் திறக்காத சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. தற்போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக வெளியாகும் தகவல்களுக்கு தமிழக வெற்றி கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் இது தொடர்பாக விளக்கம் அளித்து இருந்தார்.

தமிழக வெற்றி கடகம் கூட்டணிக்கு வருமா என்று நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், என் டி ஏ கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையுமா இணையாதா என்பது பற்றி தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார்.
இதையும் படிங்க: “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!
தமிழக வெற்றி கழகம் உடனான கூட்டணி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கைவிரித்தார். நடிகர் ரஜினிகாந்த் மீதான ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கண்டிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நடிகர் ரஜினிகாந்த் மீதான விமர்சனத்திற்கு ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!