புழல் ஏரி, செங்குன்ற ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இது சென்னையின் முக்கிய குடிநீர் ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி 1876 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. புழல் ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 4,500 ஏக்கர் ஆகும், மேலும் இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. புழல் ஏரி மழைநீரைப் பிடித்து சேமிப்பதோடு, பூண்டி ஏரி மற்றும் சோழவரம் ஏரியிலிருந்து கால்வாய்கள் மூலம் வரும் நீரையும் சேமிக்கிறது. குறிப்பாக, பூண்டி ஏரியிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் இதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
சோழவரம் ஏரியும் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாகும். இது திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடி. சோழவரம் ஏரி, புழல் ஏரியுடன் கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விரு உயிர்களின் நீர்மட்டமும் கனமழையின் காரணமாக கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னைக்கு லெட்டர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாநில மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், விடாது கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: விஜய் இன்னும் அரசியலில் வளரவில்லை.. ஒரே போடாக போட்ட சரத்குமார்..!!
இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதான நீர் பிடிப்பு பகுதிகளில் கடமடை பெய்ததன் காரணமாக சோழவரம் மற்றும் புழல் ஏரிகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. அதன்படி, புழல் ஏரிக்கு நேற்று 278 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 880 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், சோழவரம் ஏரிக்கு 122 கன அடி நீர்வரத்து வர தொடங்கி உள்ளது.
இதையும் படிங்க: பொன்முடிக்கு எதிரான வழக்கு.. காவல்துறைக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..??