அமெரிக்க (USA) கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், அந்த அணியின் முக்கியத் தூணாகக் கருதப்படுபவருமான ஆரோன் ஜோன்ஸ், ஆட்ட நிர்ணயச் சூதாட்டப் புகாரில் சிக்கி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடத் தற்காலிகத் தடையைப் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-24 ஆம் ஆண்டு நடைபெற்ற Bim10 என்ற கிரிக்கெட் தொடரின் போது, ஆரோன் ஜோன்ஸ் ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிகளுக்கு மாறாகச் செயல்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன:
போட்டியின் முடிவைச் சாதகமாக மாற்றும் நோக்கில் அவர் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான அணுகுமுறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தவறியது உட்பட மொத்தம் 5 ஊழல் தடுப்பு விதிமீறல் புகார்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தப் புகார்களைத் தொடர்ந்து, முறையான விசாரணை முடியும் வரை அவர் எந்த ஒரு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது என ஐசிசி தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: "வங்கதேசத்திற்கு பதில் ஸ்காட்லாந்து!" - டி20 உலக கோப்பை தொடரில் அதிரடி திருப்பம்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் கடுமையானக் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விளக்கம் அளிக்க ஆரோன் ஜோன்ஸிற்கு ஐசிசி 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் அவர் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்தே அவரது கிரிக்கெட் எதிர்காலம் மற்றும் தடையின் காலம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
அமெரிக்கக் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தச் சூழலில், அந்த அணியின் நட்சத்திர வீரர் இத்தகையப் புகாரில் சிக்கியுள்ளது அந்த நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "T20 World Cup-ல் ட்விஸ்ட்!" வேற ஊர்ல வைங்க! - இந்தியா வராமல் அடம் பிடிக்கும் வங்கதேசம்.. ஷாக் ஆன ICC!