தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைந்தது. பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைந்தது. ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபோது, திமுக சார்பில் வில்சன், சல்மா,சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டனர்.
மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மையம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மையம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்களும், கமல்ஹாசனை மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டி இன்றி தேர்வாகினர். மாநிலங்களவைக்கு தேர்வான ஆறு பேரும் இன்று பதவி ஏற்றனர்.

முதல்முறையாக மாநிலங்களவையில் கால் பதித்த கமல்ஹாசன் இன்று பதவியேற்றார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றார். கமல்ஹாசன் எனும் நான்., உண்மையான பற்று ஆர்வமும் பற்றுறுதியும், இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாட்டையும் உண்மையாக கொண்டிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதி கூறி பொறுப்பேற்றார்.
மாநிலங்களவை உறுப்பினராக, கமல்ஹாசனுக்கு தேசிய அளவில் தனது கருத்துகளை முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது பேச்சுத் திறனும், சமூக அக்கறையும், பகுத்தறிவு சிந்தனையும் நாடாளுமன்ற விவாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கல்வி, சமூக நீதி, மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற துறைகளில் அவரது பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உஷ்ஷ்ஷ்.. கன்னடத்தை பத்தி நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்.. கமலுக்கு ஹைகோர்ட் வார்னிங்..
இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு கிடைத்த உயரிய கௌரவம்.. வாழ்த்து சொன்ன முதல்வர்.. ஆண்டவரின் ரியாக்ஷன்..!