ஆணவப் படுகொலை சம்பவங்கள் சமூகத்தில் ஆழமான, பல பரிமாணங்களைக் கொண்ட பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இவை வெறும் தனிநபர் கொலைகளாக மட்டும் இல்லாமல், சமூக அமைப்பு, மதிப்புகள், அதிகார உறவுகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கொடூரமான வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
இத்தகைய கொலைகள் முதன்மையாக சாதி, கௌரவம், பாலின அதிகாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நிகழ்கின்றன. குறிப்பாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், சாதி மீறிய காதல் திருமணங்கள், குறிப்பாக ஆதிக்க சாதி பெண்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஆண்களும் இணைவது போன்றவை குடும்ப கௌரவத்தை சீரழிப்பதாகக் கருதப்படுகிறது.

இதன் மிகப் பெரிய சமூக விளைவு, இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் பயமும் பாதுகாப்பின்மையும். காதல், திருமணம் போன்ற இயல்பான மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கே உயிர் பலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், பலர் தங்கள் உணர்வுகளை அடக்கி வைத்துக்கொள்கின்றனர். மேலும், இத்தகைய கொலைகள் சமூகத்தில் பிளவை ஆழப்படுத்துகின்றன. நெல்லை, பேட்டை பகுதியில் இளம்பெண் மர்ம மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு உள்ளது. நெல்லையை சேர்ந்த சிவமதி என்ற பெண்ணும் ஒரு இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் மூன்று நாட்களில் திருமணம் நடக்க இருந்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே இடத்தில் 20 கல்குவாரிகள்..! பாழாகும் இயற்கை..! அதிர்ச்சியூட்டும் காட்சிகள்..!
இந்த நிலையில் சிவமதி மர்மமான முறையில் இருந்துள்ளதாக அவரது காதலன் கூறியுள்ளார். சிவமதி காதலில் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை என்றும் அவரை பெற்றோர் தாக்கும்போது தான் அலைபேசி அழைப்பில் தான் இருந்ததாகவும் கூறியுள்ளார். சிவமதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே நெல்லையில் கவின் படுகொலை செய்யப்பட்ட பிரச்சனை கூட ஓயாத சூழலில் மீண்டும் ஒரு ஆணவ படுகொலை குற்றச்சாட்டு பயத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: நெல்லை கவின் கொலை..! சிசிடிவி சமர்ப்பிக்க ஆணை..! மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு..!.