திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில், சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பழனி தண்டாயுதபாணி மடத்திற்கு சொந்தமான நிலம் எவ்வாறு விற்பனை செய்யப்பட்டது என்பது தொடர்பான பத்திரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக, அந்த விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள அந்தப் பத்திரத்தில், தண்டாயுதபாணி மடம் ஒரு தனியார் அறக்கட்டளை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தண்டாயுதபாணி மடத்திற்குச் சொந்தமான நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டி, தர்ம காரியங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிலத்தின் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத காரணத்தால், அதை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் விற்பனைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்ததே அதிக விலை என்றும் அந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பழனி முருகன் கோவில் LAND SCAM... சூடு பிடிக்கும் விசாரணை..! ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு.!!
மேலும், கடந்த மார்ச் 27-ஆம் தேதி தயாரிக்கப்பட்ட இந்த விற்பனைப் பத்திரம், ஜூன் 6-ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது வெளியாகியுள்ள அந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?