தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அனுமந்தீர்த்தம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இன்று, அதே பகுதியை சேர்ந்த சசிகலா பெட்ரோல் போடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். G.pay வில் பணம் செலுத்துவதற்காக சசிகலா நின்றிருந்தபோது, எஸ்.பட்டியை சேர்ந்த கருங்கண்ணன் மற்றும் அவருடைய பேரன் அவினேஸ்வரன் பெட்ரோல் போடுவதற்காக காத்திருப்பதாகவும், இருசக்கர வாகனத்தை சீக்கிரமாக எடுங்கள் எனக்கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சசிகலா கருங்கண்ணனை மரியாதை குறைவாக பேசி உள்ளார். இதனை பார்த்த அவருடைய பேரன் அவினேஷ்வரன் , சசிகலாவை தள்ளிவிட்டு தாக்கி உள்ளார். இதனை தொடர்ந்து சசிகலா அணிந்திருந்த காலணியால் அவினேஸ்வரனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பின்பு பெண்மணி என்றும் பாராமல் அந்த இளைஞர் சசிகலாவை கடுமையாக தாக்கியுள்ளார். தகவல் அறிந்த சசிகலாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரூர் To ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மருந்தகங்களில் CCTV பொருத்த மத்திய அரசு பரிந்துரை!! காரணம் இதுதானாம்..!!
பின்பு அங்கு வந்த காவல்துறையினர் சசிக்கலாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பெயரில் சாலைமறியலை கைவிட்டனர். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: மரகதத்தை விட எனக்குத்தான் அதிக பிரச்னை கொடுத்தாங்க! தேர்தல் அனுபவத்தைப் பகிர்ந்த தவெக எம்எல்ஏ சத்தியபாமா!
பெட்ரோல் பங்கில் GPay-யில் பணம் செலுத்த காத்திருந்த பெண் மீது தாமதமானதாக கூறி மற்றொரு பைக்கில் வந்தவர்கள் தாக்குதல்... தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்..! NewsReport | #Dharmapuri #petrolBunk #ViralVideo https://t.co/znSZ0KdSR1
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 11, 2026