சிவப்பு கம்பளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேநீர் குவளையுடன் நடப்பது போல உருவாக்கப்பட்ட AI செய்யறிவு வீடியோ ஒன்று, காங்கிரஸ் தலைவரின் எக்ஸ் பதிவால் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தில்லி காங்கிரஸ் பேச்சாளரான டாக்டர் ராகினி நாயக், தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “இப்போ இதை யார் செய்தது?” என்று கேள்வி எழுப்பியது, பாஜக தரப்பினரை கொதிக்க வைத்துள்ளது.
வீடியோவில், சிவப்பு கம்பளத்தில் உலாவும் பிரதமர் மோடி, ஒரு கையில் தேநீர் குவளையை, மறுபுறம் தம்ளர்களை வைத்துக்கொண்டு, “ச்சாய்... ச்சாய்... யாருக்கும் தேநீர் வேண்டும்?” என்று ஹிந்தியில் சத்தமிட்டு நடப்பது போல காட்டப்பட்டுள்ளது. இது பிரதமரின் சிறு வயதில் குஜராத் வதோதராவில் தேநீர் விற்ற ‘ச்சாய் வாலா’ பின்னணியை கிண்டல் செய்வது போல் உள்ளது. ராகினி நாயக்கின் பதிவு, டிசம்பர் 2 இரவு பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதற்கு பாஜக சார்பில் உடனடி பதிலடி கொடுத்துள்ளது. பாஜக பேச்சாளர் ஷேசாத் பூனவல்லா, தனது எக்ஸ் பக்கத்தில், “பாராளுமன்றத்தை அவமதித்த ரேனுகா சௌத்ரி பிறகு, இப்போ ராகினி நாயக் பிரதமர் மோடியின் ‘ச்சாய் வாலா’ பின்னணியை கிண்டல் செய்கிறார்.
இதையும் படிங்க: நேரு மீது ராஜ்நாத் சிங் சுமத்திய குற்றச்சாட்டு!! பாஜக மீது பிரியங்க காந்தி பாய்ச்சல்!
ஏழை OBC சமூகத்தைச் சேர்ந்த ‘காம்தார்’ (உழைப்பாளி) பிரதமரை, ‘நாம்தார்’ (உயர்குடி) காங்கிரஸ் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் இதற்கு முன்பும் 150 முறைக்கும் மேல் அவமானப்படுத்தியுள்ளனர். பிகாரில் அவரது தாயாரை சித்திரித்து வீடியோ வெளியிட்டு அவமதித்தனர். மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடியின் ‘ச்சாய் வாலா’ கதை, அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கிய பகுதி. குஜராத் வதோதரா ரயில்வே நிலையத்தில் தந்தையுடன் தேநீர் விற்ற சிறு வயதை அவர் அடிக்கடி நினைவுகூர்கிறார். இதை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வது பாஜகவுக்கு சாதகமாகவே மாறியுள்ளது.
2014 தேர்தலுக்கு முன், காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், மோடியை “ச்சாய் வாலா” என்று திட்டியது பெரும் சர்ச்சையாகி, காங்கிரஸுக்கு பின்னடைவாக முடிந்தது. அதேபோல், ராகுல் காந்தியும் ‘ச்சாய் வாலா’ என்று விமர்சித்தது பாஜகவின் பிரசாரத்தை வலுப்படுத்தியது.
இந்த வீடியோ சர்ச்சை, தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர்கால அமர்வின் நடுவே வெடித்துள்ளது. காங்கிரஸ் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் இல்லை. ஆனால், பாஜக தலைவர்கள் இதை “அவமானமான தந்திரம்” என்று கூறி, மக்களிடம் காங்கிரஸை எதிராக்க முயல்கின்றனர். சமூக வலைதளங்களில் #ChaiwalaControversy என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக தலைவர்களை புகழ்ந்து தள்ளும் சசிதரூர்!! கடும் புகைச்சலில் காங்,., தலைவர்கள்!