ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெறக்கூடிய சூரசம்ஹார நிகழ்ச்சி காண்பதற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே திருச்செந்தூரை நோக்கி பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது.
ஆறு நாட்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை தரிசித்து கடலில் நீராடி சென்றால் தாங்கள் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை குறிப்பாக குழந்தை வரம் திருமண வரம் போன்ற வேண்டுதல்களை பக்தர்கள் முன்வைத்து கடும் விரதம் மற்றும் பால் பழம் மற்றும் சாப்பிடும் விரதம் என பல்வேறு விரதங்களை இருந்து முருகன் அருளை பெற சூரசம்கார நிகழ்ச்சி பார்த்துவிட்டு மறுநாள் நடைபெறக்கூடிய திருக்கல்யாண நிகழ்ச்சி பார்ப்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று வருவதால் அதற்கான முன்னேற்பாடுகளை மிகப்பெரிய அளவில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் செய்திருக்கிறது. குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து வரக்கூடிய பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் கோவிலிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் முன்பாக நிறுத்தப்படுகிறது. குறிப்பாக நெல்லை பகுதி வழியாக வரக்கூடிய வாகனங்கள் குமாரபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: நெருங்கும் சூரசம்ஹாரம்... முழுவீச்சில் திருச்செந்தூர் கடற்கரை தயார் செய்யும் பணிகள்...!
அதேபோல தூத்துக்குடியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் ஜே.ஜே.நகர் பகுதியிலும், கன்னியாகுமரியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செப்பலம் பகுதியிலும் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கிருந்து நூற்றுக்கணக்கான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக கோவிலுக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை இலவசமாக வழங்கப்படவுள்ளதால், பக்தர்கள் எந்த நெருக்கடியும் இல்லாமல் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள:அது.
சிசிடிவி மூலம் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து காவலர்கள் நகர பகுதியில் மூன்று இடங்களில் இதற்காக தடுப்பு சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை முழுமையாக சோதனையிட்ட பிறகு அனுமதித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால், குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே கோயில் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
கந்தசஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி யாக பூஜையுடன் தொடங்கியது. 12 நாட்கள் நடக்கவுள்ள திருவிழாவில், முதல் ஐந்து நாட்கள் சஷ்டி விரதம் நிறைவடைந்தது. ஆறாம் நாளான இன்று சூரசம்ஹாரமும், நாளை முருகன்-தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கவுள்ளடு. அடுத்த ஐந்து நாட்கள் ஊஞ்சல் சேவை என பிரம்மாண்டமான நிகழ்வுகள் தொடரும்.
இதையும் படிங்க: மோன்தா புயல் சென்னையை நெருங்கியாச்சு... உஷார் மக்களே...! அடிச்சு நகர்த்தப்போகுது...!