கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், ஆரியமா சுந்தரம் ஆகியோர் ஆஜர் ஆகி விளக்கம் அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையின் போது, பிரேத பரிசோதனை இரவோடு இரவாக நடத்தப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கூட்ட நெரிசல் விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம், கோரிக்கையை விடுத்து மற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்து உள்ளது.
கூட்ட நெரிசல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்றும் தமிழக அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்த அரசு முயல்வதாக கரூர் கூட்ட நெரிசலில் பலியான பாத்திமா பானுவின் கணவர் பிரபாகரன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்படி இருக்க எஸ். .ஐ.டி விசாரணை எப்படி நியாயமாக இருக்கும் என்று பிரபாகரன் வாதிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… சிபிஐ விசாரிக்க தடை இல்லை… சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!

நம்பர் பிளேட் இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்துக்கு நடுவே செல்ல அனுமதிக்கப்பட்டது என்றும் கூறினார். 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக தமிழக அரசு வாதிட்டது. முதலமைச்சர் கருவூருக்கு இரவோடு இரவாக சென்றார் என்றும் தமிழக அரசு கூறியது. மேலும், கூட்டத்தை நோக்கி விஜய் தண்ணீர் பாட்டில்களை வீசியதால் மேலும் நெரிசல் அதிகமானது என தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், கூட்ட நெரிசல் விவகாரத்தை விசாரிப்பது யார் என்பதை தமிழக வெற்றிக் கழகமும், பாதிக்கப்பட்டவர்களும் தீர்மானிக்க முடியாது எனவும் தமிழக அரசு வாதம் முன்வைத்தது. அப்போது, கூட்ட நெரிசலில் எந்த ஒரு போலீசாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூட்டநெரிசலில் பலியான சந்திராவின் கணவர் செல்வராஜ் வாதிட்டார். இதனையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் தப்பி செல்லவில்லை... போக சொன்னதே போலீஸ்தான்! TVK காரசார வாதம்...!