அமெரிக்க உச்ச நீதிமன்றம் பெரும் அதிர்ச்சி தீர்ப்பு அளித்துள்ளது. டிரம்ப் அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் விதித்த பரஸ்பர வரிகள் (reciprocal tariffs) செல்லாது என 6-3 என்ற பெரும்பான்மை தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு, வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது என தெளிவுபடுத்தியது. இது டிரம்பின் முக்கிய பொருளாதார கொள்கைக்கு பெரும் பின்னடைவு.
இருப்பினும், டிரம்ப் உடனடியாக பதிலடி கொடுத்தார். செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு, "எதுவும் மாறவில்லை. இந்தியா வரிகளை செலுத்தும், அமெரிக்கா செலுத்த வேண்டியதில்லை" என்று திட்டவட்டமாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியை "சிறந்த மனிதர், மிகவும் புத்திசாலி" என புகழ்ந்தார். "நாங்கள் ஒப்பந்தம் செய்தோம். இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்தியா வரி செலுத்தும், நாங்கள் செலுத்த மாட்டோம்" என்று விளக்கினார்.
இதையும் படிங்க: போருக்கு தயாரா இருங்க! வம்பிழுக்கும் அமெரிக்கா! படைகளை தயார் செய்யும் கிரீன்லாந்து! அதிகரிக்கும் பதட்டம்!
ஏற்கனவே, இந்திய பொருள்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் கூடுதல் 25% வரி. பின்னர் இடைக்கால வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையால் 18% ஆக குறைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இது மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிரம்ப், ஒப்பந்தம் அப்படியே தொடரும், எந்த மாற்றமும் இல்லை என உறுதிப்படுத்தினார். இது "சிறந்த வர்த்தக ஒப்பந்தம்" எனவும் கூறினார்.
டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான பிறகு, அமெரிக்க நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி உலக நாடுகள் மீது கடும் வரிகளை விதித்தார். வர்த்தக பற்றாக்குறையை சமாளிக்க இதை செய்ததாக கூறினார். இந்தியா உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஜனநாயக கட்சி, வணிகர்கள் உள்ளிட்டோர் வழக்கு தொடுத்திருந்தனர்.
இருப்பினும், டிரம்ப் புதிய 10% உலகளாவிய வரியை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். இந்தியா உள்ளிட்ட ஒப்பந்த நாடுகளுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் மோடி அரசை விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரம் இந்திய-அமெரிக்க உறவுகளில் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 15 நாள்தான் டைம்! மோசமான விளைவுகள் காத்திருக்கு! ஜாக்கிரதை! ஈரானுக்கு கெடு விதித்தார் அதிபர் ட்ரம்ப்!