திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கும் நிலையில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி.ஜோசப் விஜய் இன்று தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா பதவி விலகி தவெகவில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் ஏற்பட்டது.
தவெக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முதல்வரின் இந்த பிரச்சாரம் அமைந்தது. பிரச்சார மேடைக்கு வந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரச்சார மேடையில் தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமாவை கை கொடுத்து முதல்வர் விஜய் வரவேற்றார். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்காததற்கு கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் பேசி இருந்தார்.

இதனைக் குறிப்பிட்டு முதல்வர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். அந்த குழந்தையே நீங்க தானே என்று தெரிவித்தார். இனி வரும் தேர்தல்களில் மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை, ஓட்டு போடவில்லை என்றும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என தெரிவித்தார். நம்மகிட்ட இந்த மன்னராட்சி மனப்பான்மை என்பது எப்பவும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். தீய சக்தி திமுகவுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்து சுயநலமாக சுற்றுபவர்கள் நாங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: கொங்கு நாட்டு தங்கங்களே..! உங்க வீட்டு விஜய்..! தாராபுரத்தில் CM பேச்சால் அதிர்ந்த பிரச்சார மேடை..!
2026 தேர்தலில் மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்ததை மறந்து இன்னமும் நாங்கள்தான் முதல் வரி என சிலர் நினைக்கிறார்கள் என்று கூறியுள்ளார். எம்மதமும் நம்மதம் என்று சொல்லி தான் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம் என்றும் கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ், b பக்ரீத் என எல்லாவற்றுக்கும் வாழ்த்து சொல்லுவோம் எனவும் கூறினார். சாதாரண மக்களை தேர்தலில் நிற்க வைத்து தான் குறுநில மன்னர்களை தோற்கடித்தோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: அசிங்கமா பேசுறாங்க...! EPS தலைமை பிடிக்காமல் தான் வந்தேன்.. மேடையிலேயே அழுத சத்தியபாமா... ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!