• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தனித்து நின்று வெல்ல துணிவில்லையா? முதல்வர் விஜய் மற்றும் தவெக கூட்டணியை விளாசிய சீமான்!

    மதுராந்தகம் இடை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
    Author By Thenmozhi Kumar Wed, 30 Sep 2026 21:29:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurantakam Bypoll: Seeman Campaigns for Janakiraman; Targets Maragatham Kumaravel & Congress.

    வாக்குக்குப் பணம் கொடுக்க மாட்டோம் என்று வாய்ஜாலம் பேசிய முதலமைச்சர் விஜய், மதுராந்தகம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தலா ₹6,000 பணமும், அதிமுகவிலிருந்து வந்த வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ₹50 கோடியும் கொடுத்துள்ளார் என்றும், இந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களுக்குப் பதிலாக ரீல்ஸ் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து, அச்சரப்பாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சார உரையாற்றினார்.

    அப்போது கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியான தவெகவின் போலி வேஷங்களை அக்குவேறு ஆணிவேறாகத் தோலுரித்துப் பேசிய சீமான், இன்னும் பல தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகளின் காரணமாக இடைத்தேர்தல் வரவிருக்கிறது; மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ பதவியை உதறிவிட்டு அடுத்த கட்சிக்கு எதற்காகத் தாவ வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தவெக வேட்பாளர் குறித்துப் பேசுகையில், மரகதம் குமரவேலை ஆண் வேட்பாளர் என்று நினைத்து சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்; அதிமுகவிலிருந்து விலகி தவெகவிற்குள் இவரை அழைத்துவந்த நாய் யார்? இவர் என்ன தவெக கட்சியை ஆரம்பித்தார்களா? என்று மிகக் காரசாரமாகச் சாடினார்.

    இதையும் படிங்க: மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    bypoll

    காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்த அவர், காங்கிரஸ் கட்சியில் வாக்குச்சாவடிக்கு பூத் ஏஜென்ட் போடக்கூட ஆள் கிடையாது; எனக்குத் தமிழ்நாட்டில் 20 லட்சம் வாக்குகள் உள்ளன, ஆனால் காங்கிரசுக்கு 2 லட்சம் வாக்குகள் கூட இல்லை; தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்துவிடும் என்று கூறி இவர்கள் தவெகவுக்கு ஆதரவு தருகிறார்கள்; வரட்டும் ஆளுநர் ஆட்சி, விஜய் முடிந்தால் தனித்து நின்று வென்று ஆட்சி அமைக்கட்டும், கூட்டணி வைத்து ஏன் தயவில் ஆட்சி நடத்த வேண்டும்? என்று முழங்கினார்.

    பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது 108 ஆம்புலன்ஸ் வாகனம் வர, உடனடியாக வழிவிடுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்திய சீமான், அவசர ஊர்திக்கு வழிவிடுங்கள்; தமிழ்நாடு அரசு அவசர ஊர்தியில்தான் போய்க்கொண்டிருக்கிறது; என்னால் மட்டும் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க முடியாதா என்ன? என்று ஆவேசப்பட்டார்.

    தவெகவின் எதிர்காலம் மற்றும் ஆட்சியின் அவலங்கள் குறித்துப் பேசிய அவர், இந்த ஆட்சி 6 மாதம் கூடத் தாங்காது போல் தெரிகிறது; ஆனால் தாராபுரம் தவெக வேட்பாளர் இந்தக் கட்சி 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்கிறார்; நான் தேர்தலில் வென்று சட்டமன்றத்திற்குள் சென்றிருந்தால் எவனும் உள்ளே இருந்திருக்க மாட்டீர்கள்; ஆறு மாதம் என்னிடம் ஆட்சி இருந்தால் இந்த உலகமே திரும்பிப் பார்த்திருக்கும், ஆனால் இந்த ஆட்சியில் வெற்று ரீல்ஸ்தான் ஓடுகிறது, இந்த ரீல்ஸ்களைத் தீ வைத்துத்தான் கொளுத்த வேண்டும் என்று கடுமையாகச் சாடினார்.

    தவெகவின் கொள்கைத் தெளிவின்மையைக் கேள்விக்குள்ளாக்கிய அவர், தவெகவின் கல்வி, மருத்துவம், பொருளாதாரக் கொள்கை என்ன? பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டு நிர்மல் குமாரை ஏன் கட்சியில் சேர்த்துக்கொண்டீர்கள்? பெரம்பூரில் மதம் இருக்கிறது என்று கூறும் விஜய், திருச்சியில் ஏன் நிற்க வேண்டும்? பெரம்பூரிலேயே நின்று பார்க்க வேண்டியதுதானே? என்று சவால் விடுத்தார்.

    அரசு அறிவித்துள்ள திட்டங்களை விமர்சித்த அவர், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் என்கிறார்கள்; என் பிள்ளைக்கு முதலமைச்சர் விஜய் தாய்மாமனாக இருக்க வேண்டாம்; விமான நிலையம் கட்டவும் தலைமைச் செயலகம் கட்டவுமா முதல்வரைத் தேர்வு செய்தோம்? பட்டினப்பாக்கத்தில் மீனவ மக்கள் பயந்து நடுங்கும் சூழல் இன்னும் மாறவில்லை; தங்கத் தாலி கொடுத்தால் அடமானம் வைக்கக் கடைக்குச் செல்லாதீர்கள், அது உண்மையான தங்கம்தானா என்பதை முதலில் சரிபாருங்கள் என்று கிண்டலடித்தார்.

    தற்போது மழை பெய்யும் போதே மின்தடை ஏற்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் மீதுள்ள அக்கறையால்தான் தான் கோபப்படுவதாகவும், இன்னும் 20 ஆண்டுகள் முதலமைச்சராக இருக்க வேண்டும் என விஜய் ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். இறுதியாக, ஊழல் மற்றும் ஏமாற்று அரசியல் சக்திகளைப் புறந்தள்ளி, தூய மக்கள் அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜானகிராமனுக்கு மாபெரும் வெற்றியை வழங்குமாறு மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
     
    இதையும் படிங்க: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    மேலும் படிங்க
    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    தமிழ்நாடு
    36 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினி உருக்கம்!

    36 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினி உருக்கம்!

    தமிழ்நாடு
    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தமிழ்நாடு
    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    தமிழ்நாடு
    36 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினி உருக்கம்!

    36 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினி உருக்கம்!

    தமிழ்நாடு
    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தமிழ்நாடு
    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share