“சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி” என்ற பழமொழி உண்டு. தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை, சும்மா, சும்மா சீண்டிக்கிட்டே இருந்தால் இப்படித்தான் ஆகும் என்பது போல் சீமானுக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி கூட்டம் ஒன்றில் விஜய் ஒருமையில் சாடிய சீமான், விஜய் என்றாவது தமிழ், தமிழர் நலன், தமிழர்களின் உரிமை பற்றி பேசியிருக்கிறாரா?. எல்லாரும் சமம் என்றால் ஆந்திராவில் போய் கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே. எங்கு இருக்கிறோமோ அந்த மண்ணுக்கான அரசியலை செய்ய வேண்டும் என சரமாரியாக விமர்சித்திருந்தார்.
சீமான் வாடா, போடா என ஒருமையில் விமர்சித்திருந்த போதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சின்ன கண்டனம் கூட வெளியாகவில்லை. ஆனால் இன்று நாகை அண்ணா சிலை அருகே பரப்புரையாற்றிய விஜய் சைலண்ட்டாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
நாகையில் விஜய் பேசியதாவது: “மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் இதே நேரத்தில் நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் அவர்கள் இலங்கையில் இருந்தாலும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நமது கடமை இல்லையா?.
இதையும் படிங்க: இனி தடை போட்டீங்கன்னா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த விஜய்...!
மீனவர்களின் உயிர் எந்த அளவு முக்கியமோ அந்த அளவுக்கு இலங்கை தமிழர்களுடைய உயிரும் வாழ்வும் நமக்கு மிக முக்கியம். மீனவர்கள் படும் துயரைப் பார்த்து பெரிய கடிதம் எழுதிவிட்டு பிறகு அமைதியாக இருப்பதற்கு நாம் உண்ணும் கபட நாடகமாடும் திமுக கிடையாது. மற்ற மீனவர்கள் இந்திய மீனவர்கள் நமது மீனவர்கள் தமிழக மீனவர்கள் இப்படி பிரித்து பார்த்து பேசுவதற்கு நாம் பாசிச பாஜக இல்லை. நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதே நமது முக்கியமான எண்ணம்” என பேசியுள்ளார்.
இதுவரை சீமான் ஈழத் தமிழர்கள் விவகாரத்தை வைத்து தான் அரசியல் செய்து வந்தார். இப்ப அதுவும் போச்சு, சும்மா இருந்த எங்க தலைவரை பேசு, பேசுன்னு சொல்லி இப்படி நாகை தமிழர்களில் தொடங்கி ஈழத்தமிழர் வரை பேச வச்சிட்டீங்க. இப்ப உங்களுக்கு இருந்த ஒரே மேட்டரும் போச்சே என தவெக தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “சி.எம். சார் மனசை தொட்டு சொல்லுங்க”... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - வெளுத்து வாங்கிய விஜய்...!