கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணு தோப்பு என்ற இடத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விக்கரவாண்டி - கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோட அகலப்படுத்தும் பணியானது நடந்து வருகிறது. இந்த அகலப்படுத்தும் பணி நடைபெறும் பகுதிக்கு அருகே மணலில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணுடைய கால் மற்றும் முகம் மட்டும் வெளியே தெரிந்த சம்பவம் ஒட்டுமொத்த வடலூரையே உலுக்கியுள்ளது.
அப்பகுதியில் சாலையின் அருகே அதிக அளவு மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது இந்த இடத்தில் முகம் சிதைந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் உடல் புதைந்த நிலையில் கிடந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் இது குறித்து வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் அதன் அடிப்படையில் நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகம் சிதைந்த நிலையில் இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் கொலை செய்யப்பட்டாரா அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் வடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா ஏற்பு! ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சம்பவ இடத்திற்கு தடவியல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டு கொண்ட பிறகுதான் அந்த உடலானது தோண்டி எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இளம் பெண்ணை இங்கேயே கொன்று புதைத்தார்களா அல்லது வேறு எங்கே கொலை செய்து இங்கு வந்து கொண்டுவந்து புதைத்தார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. சாலையின் அருகே இளம் பெண் முகம் சிதைந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
இதையும் படிங்க: காங்கிரஸுக்குள்ளேயே corruption bomb..! அதிர வைத்த MP ஜோதிமணி..!