தமிழ் சினிமாவில் வெளியே சென்ற நடிகைகள் தற்பொழுது மீண்டும் கம்பேக் கொடுத்து கலக்கி வருகின்றனர். அதிலும் நடிகை சிம்ரன் மீண்டும் சினிமாவில் வந்ததை பார்த்ததும் மக்கள் துள்ளிக்குதித்து அவரை வரவேற்றனர், அப்படியே தேவயானி, ரம்பா என அனைவரும் மீண்டும் என்ட்ரி கொடுத்து தங்களுக்கான ரசிகர்களை பிடித்து வருகின்றனர். நடிகர் மோகன் கூட லியோவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.. அதேபோல் நடிகர் அப்பாஸும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படி அனைவரும் மீண்டும் சினிமாவில் வருவதால் வெள்ளித்திரையில் பிரபலங்கள் கலக்கத்தில் உள்ள நேரத்தில், சின்னத்திரையை கலங்கடிக்க ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரபல நடிகை.. அதன்படி, 2000களில் சிறப்பாக கவனிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் சந்தியா.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ திரைப்படம் மூலம் 2004-ம் ஆண்டில் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கிய சந்தியா, அந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தார். அவரது இயற்கையான நடிப்பு, உணர்வுபூர்வமான காட்சிகளில் தன்னிலை மறந்த நடிப்பு ஆகியவை ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து 'டிஷ்யூம்', 'வல்லவன்', 'கண்ணாமூச்சி ஏனடா', 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்', 'மாஸ்' உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான தோற்றம் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததன் மூலம், தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இப்படியாக, 2015-ம் ஆண்டில் சந்தியா, தொழிலதிபரான அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில குறும்படங்கள் மற்றும் ஓரிரு தமிழ்த் திரைப்படங்களில் தோன்றியிருந்தாலும், 2016-க்கு பிறகு அவரை வெள்ளித்திரையில் பெரிதாக காண முடியவில்லை. சினிமாவை விட தனது குடும்ப வாழ்க்கையை முன்னிலைப்படுத்திய சந்தியா, குடும்பம் மற்றும் குழந்தையின் பராமரிப்பில் முழுக் கவனத்தைக் செலுத்தி வந்தார். இந்த நேரத்தில், அவரது ரசிகர்கள் பலரும், “மீண்டும் எப்போது திரும்ப வருவார் சந்தியா?” என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். 2016க்குப் பிறகு, சந்தியா நடித்த கடைசி படம் ‘ருத்ரவதி’. ஆனால் அந்த படம் பெரிதளவில் திரைக்கு வராததால், ரசிகர்களின் கவனத்தில் அதிகம் படவில்லை. எனினும், தனது நடிப்புத் திறமை குறையவில்லை என்பதை அந்தப் படத்திலும் காட்டினார்.
இதையும் படிங்க: என்னை வெளியே நிக்க வச்சாங்க.. சினிமாவில் சொகுசு கார் வச்சுதான் மரியாதை..! பகிர் கிளப்பிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்...!
இப்போது, சினிமா உலகில் இருந்து ஒதுங்கி இருந்த சந்தியா, புதிய திருப்பமாக தனது ரீ-என்ட்ரிக்கு சின்னத்திரையைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஒரே சமயத்தில் குடும்ப வாழ்க்கையையும், தனது கலை வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தும் நோக்கத்துடன், ஒரு பிரபல டி.வி. தொடரில் சிறப்பு தோற்றத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தத் தொடரின் கதையின் ஒரு முக்கியமான கட்டத்தில் அவருடைய தோற்றம் இடம்பெறவிருக்கிறது. ஆரம்பமாக சில வாரங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து வரும் வரவேற்பை பொறுத்து தொடர்ச்சியாக நடிப்பதற்கும் அவர் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது தமிழ் சீரியல்கள், சினிமா பிரபலங்களுக்கும் ஒரு பரந்த வாய்ப்பாக மாறியுள்ளது. பல முன்னணி நடிகைகள், சினிமாவிலிருந்து சீரியல் நடிப்புக்கு வந்திருக்கிறார்கள். ரசிகர்களுடன் நேரடி தொடர்பு மற்றும் நீடித்த தோற்றம் அளிக்கக்கூடியதாக இருப்பதாலேயே சின்னத்திரை ஒரு புதிய வாசல் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் சந்தியாவும் சின்னத்திரையைத் தன்னுடைய மீண்டுமொரு தொடக்கமாக பார்க்கிறார் போல. ‘காதல்’ படத்தில் இளம், பூங்கொத்து மாதிரியான தோற்றத்துடன் ரசிகர்களை கவர்ந்த சந்தியா, இன்று குடும்ப வாழ்க்கையில் பூரணமாக வேரூன்றியவர் என்றாலும், கலை மேடையில் மீண்டும் ஒரு தொடக்கத்திற்கு தயாராக இருப்பது அவரது சினிமா ஆர்வத்தைக் காட்டுகிறது.

அவரது சின்னத்திரை வருகை, அவரது பழைய ரசிகர்கள் மட்டுமல்லாது, புதிய தலைமுறையினருக்கும் ஒரு புதிய அறிமுகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இதையும் படிங்க: அன்று சீரியல் நடிகை இன்று ரூ.1200 கோடிக்கு அதிபதி..! பிஸினஸில் கொடிகட்டி பறக்கும் ஆஷ்கா கோரடியா..!