'ஆப்ரேஷன் சித்தூர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் நள்ளிரவு சரியாக 1:44 மணியளவில் பாக்கிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத அமைப்புகள் மீது நடத்தப்பட்டது. இதில் முப்பதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் இந்திய ராணுவம் தரப்பில் பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்று இந்த ஆபரேஷனுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை குறித்து பார்த்தால், பிரிசிசியன் ஸ்டிரைக் என்று அழைக்கிறார்கள். என்னவெனில் இப்படிப்பட்டதான தாக்குதலில் முதலில் எதிரிகளின் இலக்குகள் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படுமாம். பின்பு தரை வழியாக தாக்குதல் நடத்தினால் எப்படி சாத்தியயம். அல்லது வான்வழி தாக்குதல் நடத்த சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை முதலில் வகுக்குமாம். பின்பு தான் தாக்க செல்வார்களாம்.
அதன்படி பார்த்ததால், இந்தியா தனது இலக்கை பொறுமையாக ஆராய்ந்து, அதனை உறுதி செய்த பின்னரே இங்கு இருந்தவாறு பயங்கரவாத அமைப்புகளை தாக்கி அழித்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் பிரதமரின் ஒப்புதலுக்கு பின் தான் வீரர்களுக்கே இந்த தாக்குதல் குறித்து சொல்லப்பட்டு பின் இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உங்க வீட்லயா குண்டு போடுறாங்க.. அசிங்கமா இல்ல..! பிரபலங்களை கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள்..!

இந்த சூழலில், நடிகை மஹிரா கான் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு எதிராக தனது கருத்தை காட்டமாக தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவு செய்து பின் டெலிட் செய்து இருக்கிறார். இதனால் பலர் அவரை வசைபாடி வருகின்றனர். அவர் தனது இன்ஸ்டாவில் " நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை தைரியமாக சொல்லும் நாட்டில் பிறந்துள்ளேன். எங்கள் நாட்டில் அநீதி ஏற்பட்டால் அது குறித்து நாங்கள் அனைவரும் கூடி பேசுவோம். தீவிரவாதம் எங்கு நடைபெற்றாலும் அதற்கு எதிராக நானும் பேசுவேன். எந்தவிதமான ஆதரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்த்தி உள்ளது. போர் பற்றிய உண்மைத் தன்மை இல்லாத இந்தியா, வெறுப்புணர்வினால் பல வருடங்களாக இப்படிப்பட்ட வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்தியாவின் இந்த செயலை நான் எனது பிறந்தது முதல் பார்த்து வருகிறேன். உங்களது ஊடகம் பாகிஸ்தானுக்கு எதிரான வெறுப்பை வளர்க்கிறது. இன அழிப்பு, போர்க் குற்றங்கள் என்ற முறையில் உங்களது உயரிய குரல் என்றுமே அமைதியாகவே இருக்கிறது. இது சட்டத்தினால் நடப்பதே இல்லை பயத்தினால் மட்டுமே நடக்கிறது. இந்தப் பயத்தில் நீங்கள் எடுத்த முயற்சியை கண்டு வென்றதாகக் நீங்களே கூறுகிறீர்கள்.
என்னைப் பொறுத்தவரை உங்களின் இந்த அமைதியே மிகப்பெரிய தோல்வி தான். நள்ளிரவில் நகரத்தை தாக்கிவிட்டு அதை போய் வெற்றி என்பதா? இதை சொல்ல உங்களுக்கு அவமானமாக இல்லையா? பாகிஸ்தானை நான் அதிகம் நேசிக்கிறேன். நாங்கள் சரியானவற்றையே எப்பொழுதும் செய்வோம். இந்தக் கொடூரமான தூண்டுதலுக்குப் பிறகும் நாங்கள் உங்கள் அளவுக்குச் செல்ல மாட்டோம். அமைதி நிலவட்டும்" எனக் கூறியிருந்தார்.

இதனை பார்த்து பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வர, இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதன்படி, "பிரிவினை வாதத்தை தூண்டும் விதமாகவும் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை விமர்சிக்கும் விதமாகவும் காட்டமாக பேசிய நடிகை மஹிரா கான் மற்றும் நடிகர் ஃபவ்த் கானுக்கும் தங்களது கடுமையான கண்டனத்தை அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
உங்களது பேச்சு எங்களது நாட்டை அவமதிப்பது மட்டுமல்லாமல் தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்தவர்களையும் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களையும் இழிவுப்படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது. உண்மையில் இந்தியாவில் பணியாற்ற பாகிஸ்தான் நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் முழுமையான தடைவிதிப்பை உங்கள் செயலால் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்திய கலைஞர்களும் இனிமேல் பாகிஸ்தானிய கலைஞர்களுடன் இணைந்து நடிக்கவோ எந்த தொழில் சார்ந்த நடவடிக்கைகளோ வைக்க கூடாது. கலை என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசும் கலைஞர்களுக்கும் ஆதரவு தெரிவிக்காதீர்கள். இந்தியாவின் பல்வேறு இசை நிறுவனங்கள் பாகிஸ்தான் கலைஞர்களுடன் வேலை செய்கிறார்கள். அதனை உடனடியாக நிறுத்துமாறு தொழிலாளர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மற்ற திரைத்துறையினரும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.பணம் இரணடாவது நாடுதான் முதன்மையானதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பி அடிச்சா தாங்க மாட்ட..! பாக். தாக்குதலுக்கு பார்த்திபன் காட்டமான பதிவு..!