பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் 78-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா பலரது கவனத்தையும் ஈர்த்த நிகழ்ச்சி எனலாம். இதில் போடப்பட்டிருக்கும் சிகப்பு கம்பளத்தில் நடப்பவர்கள் தான் மிகப்பெரிய ஸ்டாராக பார்க்கப்படுவர். அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் 13ம் தேதி தொடங்கிய இந்த விழா 24ம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில் இந்த முறையும் இந்திய பாலிவுட் நடிகர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்த நடிகர் ஷாரூக்கானிடம் நீங்கள் யார் என நிருபர்கள் கேட்க, அவர் சற்றும் அலட்டி கொள்ளாமல் நான்தான் ஷாருக்கான் பாலிவுட் ஆக்டர் என சொல்லி சென்றார். இது பரவலாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: ரஜினி படம் எனக்கு பிடிக்கும்.. ஆனால் அதுவும் என்படம் தான்..! தொகுப்பாளரை குழப்பிய கமல்ஹாசன்..!

இதுவரை அடுத்து பல நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் ஒருவர் மிகவும் அதிகமாக பலரது கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்து சென்றார் என்றால் அவர்தான் ஊர்வசி ரவுத்தேலா. இவர் விதவிதமான வண்ணங்களில் அல்ட்ரா கவர்ச்சியில் ஸ்டைல் லுக்கில் கையில் ஒரு பறவையை பிடித்திருந்த படி சிகப்பு கம்பளத்தில் நடந்து வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது.

இந்த சூழலில், தற்பொழுது இந்த விழாவில் ஒரு நடிகை கலந்து கொள்ள ஊர்வசி ரவுத்தேலா எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த வகையில் "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை" இருந்தாலும் அவை அனைத்தும் ஒருவரை பார்த்து செயல்படும் என்றால் அவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராய். பார்க்க ஸ்லிம்மாக அழகுக்கே ஹாய் சொல்லும் அளவிற்கு இருக்கும் இவர் "கண்ணழகி" என்ற பட்டத்தை வென்றவர். அதுமட்டுமல்லாமல் சிரிப்பால் பலரை அடித்து, கண்களால் இளசுகளை முறைத்து, நடனத்தால் ரசிகர்களின் மனதை சிதைத்து, நடிப்பால் மனதை உடைத்து, இன்று தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்து இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

அப்படிப்பட்ட இவர், ஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு முக்கிய நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவ்விழாவுக்கு வெள்ளை நிற பனாரஸ் புடவையில் சிறப்பு வேலைப்பாடுகளுடன் உருவான காஸ்லி புடவையுடன் சிவப்பு கம்பளியில் ஒரு நடை போட்டார். இதனை பார்த்த அனைவரும் அங்கேயே ஐஸ்வர்யா ராய் மீது காதல்வயப்பட்டனர்.
இதையும் படிங்க: விஜயகாந்தின் மகனுக்கு வந்த சோதனை...! "படைத்தலைவன்" நாளை ரிலீஸ்.. இன்று வந்த சிக்கல்..!