இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ரெட்ரோ" படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படம் சூர்யாவின் 44வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இப்படம் மே 1ம் தேதி வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் வில்லன் ஜோவியல் ஜார்ஜ் என நாம் அனைவரும் நினைத்திருப்போம் ஆனால் படத்தில் வில்லனுக்கே மிகப்பெரிய குழப்பம் தான் பிரகாஷ்ராஜ் வில்லனா அல்லது ஜோவில் ஜார்ஜா அல்லது நாசரா அல்லது அவரது மகனா என படத்தில் யார் வில்லன் என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பாக படமே முடிந்து விட்டது.

மேலும், வில்லன் யார் என்பது தெரியாத படத்தில் வில்லன் கேரக்டர் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கும். தூத்துக்குடியில் ஆரம்பித்த ரெட்ரோ கதை எங்கெங்கோ நம்மை அழைத்து சென்றது. குறிப்பாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய அம்மாவை எதற்காக காசிக்குச் சென்று அடக்கம் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. பின்பு அப்படியே படம் ஆப்பிரிக்காவிற்கு செல்கிறது. அங்கிருந்து அந்தமானுக்கு சென்றாலும் வில்லன் என்ன செய்கிறார் என்று பார்த்தால் அடிமைகள் எல்லோரையும் வைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு கிப்ட் -ஆ..! விநியோகஸ்தர் கொடுத்த காஸ்ட்லி பரிசை அவரிடமே கொடுத்த சூர்யா..!

ரெட்ரோவில் உள்ள ஹார்ட் பிரேக் சீன் என்றால் அது முதலைகள் வரும் சீன் தான். முதலைகள் இருக்கும் கிணற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தள்ளிவிட்டு கொல்கின்றனர் வில்லன் டீம். படத்தில் காமெடிக்கு சிரிப்பு வரவில்லை என்றாலும் பரவாயில்லை சிரிப்பு தரப்பி என்று சொல்லி காண்பிக்கும் காட்சியில் நமக்கே சிரிப்பு வரவில்லை.

படத்தில் நிறைய விஷயங்களை எடுத்தாலும் அதனை வேண்டாம் என நிராகரித்து விட்டார்கள் என்பதைப் போல பிரகாஷ்ராஜ் வந்து சென்ற சீன்கள் எல்லாம் இருந்தது. மேலும் கருணாகரன், சிங்கம் புலி, எதற்கு வந்தார்கள் என சுத்தமாகத் தெரியவில்லை. என்னும் அளவிற்கு இப்படம் இருந்தது எனவும் இதற்கு கங்குவாவே நன்றாக உள்ளது எனவும் பலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ரெட்ரோ படம் ரூ.235 கோடி வரை வசூல் செய்து இருக்கும் இந்த வேளையில், ஏற்கனவே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் மாதம் 5ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்பொழுது அந்த தேதி மாற்றப்பட்டு படக்குழுவினரால் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரெட்ரோ திரைப்படம் வரும் மே மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: சூர்யாவின் சூன்யம்... 16 ஆண்டுகளாக அட்டர் ஃப்ளாப்... விபூதி அடிக்கும் பழைய டபரா செட்டுகள்..!