திரைத்துறையில் பலரும் காலப்போக்கில் மறைந்து விடுகின்றனர். ஆனால் சிலர், திரையில் ஒளிர்ந்ததைவிட, வாழ்க்கையின் மேடையில் நிகழ்த்தும் அசாதாரண முடிவுகளால் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நின்று கொண்டே இருப்பார்கள். இப்படியான ஒரு உன்னதமான பயணத்தை மேற்கொண்டுள்ளவர் தான் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நடிகை பாவனா ராமண்ணா. 1996-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ‘மாரிபலா’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பாவனா ராமண்ணா, தனது நடிப்புத் திறமையை தமிழிலும் வெளிப்படுத்தினார். 1999-ம் ஆண்டு ‘அன்புள்ள காதலுக்கு’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து ‘நட்சத்திர காதல்’, ‘ஆஹா எத்தனை அழகு’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி, பாவனா ராமண்ணா கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் முக்கியப் பங்களிப்பு வழங்கியுள்ளார். நடிப்பில் மட்டுமன்றி, மேடைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக சேவைகளிலும் பங்கு கொண்டு பெற்று வந்த பாவனா, இப்போது தனது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை தொடங்க இருக்கிறார். அதன்படி தற்போது 40 வயதான பாவனா ராமண்ணா, திருமணம் செய்யாத நிலையில், IVF (In-Vitro Fertilization) சிகிச்சையின் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயாக உள்ளதாக மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்த அவரது செய்தி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, தன்னம்பிக்கையுடன் எடுக்கப்பட்ட இந்த முடிவு, பெண்களுக்கு புதிய நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

அவரது பதிவில், " புதிய அத்தியாயம். ஒரு புதிய தாளம். நான் இதைச் சொல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இப்போது, நான் இரண்டு குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். என் உள்ளம் நன்றியால் நிரம்பி வழிகிறது. எனது 20 மற்றும் 30 வயதுகளில், தாய்மை எனக்கு அவசியமாக தெரியவில்லை. வாழ்க்கை, கெரியர், மற்றும் என் சொந்த பயணத்தில் நானே முழுமையாக மூழ்கியிருந்தேன். ஆனால் இன்று, 40வது வயதில் அந்த ஆசை மறுக்க முடியாத தாயிற்று. பல IVF கிளினிக்குகள் என்னை முற்றிலுமாக மறுத்துவிட்டன. என் வயதை பார்த்து என் மீது நம்பிக்கை இல்லாமல் செய்தனர். ஆனாலும், நான் நம்பிக்கையை விடவில்லை. இறுதியாக ஒரு க்ளினிக், எனது தைரியத்தையும் உடல் நிலையையும் புரிந்து கொண்டு சிகிச்சை அளித்தது. இப்போது, என் இரட்டை குழந்தைகளின் சுருள் கூந்தலில் விரல்கள் விளையாடும் நாளுக்காக காத்திருக்கிறேன்" என அவரது இந்த உருக்கமான பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: கோபத்தில் என் மனைவியை அடித்து விட்டேன்..! நடிகர் விஜய் சேதுபதி பேச்சால் பரபரப்பு..!
பெண்கள் மட்டும் இல்லாமல், குடும்பம், தாய்மை, கர்ப்பம் குறித்து விழிப்புணர்வுடன் நிறைந்த சமூகமே இதனை ஆதரவுடன் கொண்டாடி வருகிறது. பாவனாவின் இந்த முடிவு, எளிதானதல்ல. திருமணம் செய்யாமல், தனியாக தாயாக இருப்பது என்பது இந்திய சமூகத்தில் இன்னும் முழுமையாக ஏற்கப்படாத விஷயம். அதிலும் 40 வயதில் IVF மூலம் கர்ப்பம் தரிப்பது என்பது, உடல் மற்றும் மன உறுதியை வலுப்படுத்தும் செயலாகும். ஆனால், பாவனா தன்னம்பிக்கை, மனத் துணிச்சல் மற்றும் உறுதியான முடிவுகள் மூலமாக, அந்த பாதையில் தன்னைத்தானே இழுத்துச் சென்றுள்ளார்.

40 வயதிலும் தாயாகும் ஆசையை விரும்பி, அதை தன்னுடைய கடின முயற்சி மூலம் இன்றைய தினத்தில் வெற்றிகரமாக மாற்றியுள்ள நடிகை பாவனா ராமண்ணா, பலருக்கும் எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறார். திருமணம் இல்லாமல் தாய்மை என்பதைத் தேர்ந்தெடுத்த இந்த முடிவு, தனிப்பட்டது மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கான ஒரு சக்தி வாய்ந்த அடிப்படையாகவும் இருக்கிறது.
இதையும் படிங்க: அழகை பொறாமை பட வைக்கும் பேரழகு..! மாடர்ன் உடைக்கு மாறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்...!