சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த மணிமேகலை, இன்று தமிழ் தொலைக்காட்சித் துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலமான தொகுப்பாளராக திகழ்கிறார். தனது ஆரம்பக் காலங்களில் சன் மியூசிக்கில் இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், பின்னர் திருமணத்துக்குப் பிறகு விஜய் டிவிக்குச் சென்று “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக அறிமுகமாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
அந்த நிகழ்ச்சியில் சில எபிசோடுகளில் கோமாளியாக கலக்கிய பின்னர், தொகுப்பாளினியாகவும் அங்கே பயணத்தை தொடர்ந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் அவர் எதிர்பார்த்த அளவுக்கான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால், விஜய் டிவியை விட்டு வெளியேறினார். அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்குச் சென்ற மணிமேகலை, அங்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுப்பாளராக மட்டும் அல்லாமல், நிகழ்ச்சியின் முழு ரசிப்புக்கும் முக்கிய பங்காற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்படிப்பட்ட, “டான்ஸ் ஜோடி டான்ஸ் 3” நிகழ்ச்சியில், தொகுப்பாளினியாக அவரின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. ரசிகர்களிடையே அவர் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாததாக இருந்தது. ஒவ்வொரு எபிசோடிலும் தனது தனித்துவமான தொகுப்பு நடை, நையாண்டி கலந்த பேச்சுக்கள் மற்றும் உணர்ச்சிப் பூர்வமான நடத்தின் மூலம் பலரது இதயங்களையும் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி தற்போது தனது முடிவை எட்டியுள்ள நிலையில், அதன் இறுதிநாள் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள மணிமேகலை, நெஞ்சை நெகிழச்செய்யும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த அந்த வீடியோவில், நிகழ்ச்சி, ரசிகர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் "கமல் 237"..! கதாநாயகி யார் தெரியுமா..?
மணிமேகலை வெளியிட்ட வீடியோ...கிளிக் செய்து காணலாம்..
அவர் பதிவில் " இதனுடன், இந்த நிகழ்ச்சியை உருவாக்கிய ப்ரொடக்ஷன்ஸ்” குழுவினருக்கும், இயக்குநர் தினேஷ் ரிச்சர்டுக்கும், உள்ளடக்க இயக்குநர் சாம் ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பணியாற்றிய கலை இயக்கத்துறை, தொழில்நுட்ப குழு, இணை தொகுப்பாளர், நடன இயக்குநர்கள் மற்றும் போட்டியாளர்களின் ஒத்துழைப்பிற்கும் அவர் தனிப்பட்ட நன்றியை" தெரிவித்தார். மணிமேகலையின் இந்த உணர்ச்சிவசமான பதிவுக்குப் பிறகு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலரும் "DJD நிகழ்ச்சியை பார்ப்பதற்குக் காரணமே நீங்கள்தான்" எனக் கூறி அவரின் பங்களிப்பை பாராட்டுகின்றனர். மணிமேகலை தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி வெற்றியுடன் முடிவடைந்துள்ளது மட்டுமல்லாது, அவர் தொகுப்பாளராக மேலும் உயரப் போவதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். தனது தனித்துவமான திறமை, பார்வையாளர்களுடன் கொண்ட நேரடி தொடர்பு மற்றும் கலகலப்பான பாணி ஆகியவை, அவரை தமிழ் தொலைக்காட்சி உலகில் நிலைத்த முகமாக மாற்றியுள்ளது. தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 நிகழ்ச்சி தனது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதன் பைனல் எபிசோட் ஜூலை 21 திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மணிமேகலையின் பங்கு மற்றும் அவரின் நம்பிக்கைக்குரிய பேச்சால் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று வரும் மணிமேகலைக்கு, எதிர்காலத்தில் மேலும் பல மேடை நிகழ்ச்சிகளில் அசத்தும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹிட் கொடுத்த "கூலி"யின் 'மோனிகா' பாடல்...! நன்றி தெரிவித்த நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர்..!