2023ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் "மாமன்னன்". இப்படம், தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயல் வடிவேலு மற்றும் மலையாள சினிமாவின் தனிச்சிறப்பு கொண்ட நடிகர் பகத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் என்பதாலேயே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் இவர்கள் இருவரும் தங்கள் நடிப்புத் திறமையை அழகாக நேர்த்தியாக வெளிப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, இந்த இரண்டு சக்தி வாய்ந்த நடிகர்களும் மீண்டும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என பலரும் யோசித்து கொண்டிருந்த வேளையில், வடிவேலும் பகத் பாசிலும் இணைந்து “மாரீசன்” படத்தில் நடித்துள்ளனர் என்ற செய்தி வெளியானது. ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது தயாரிப்பாக உருவாகி இருக்கும் "மாரீசன்" திரைப்படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை மாறுபட்ட படைப்புகளை வழங்கிய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம், இந்தப் படத்தை பான் இந்தியா அளவிற்கு உருவாக்கி, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க இருக்கிறது. இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் இசை மேதை யுவன் ஷங்கர் ராஜா. இவர் “மாரீசன்” திரைப்படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும், தனக்கே உரிய அட்டகாசமான படைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தில் ஏற்கனவே வெளியாகிய பாடலும், படத்தின் டிரெய்லரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, டிரெய்லரில் வடிவேலுவின் சீரியஸ் தோற்றமும், பகத் பாசிலின் அதிரடியான வசனங்களும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன. மேலும், வி. கிருஷ்ணமூர்த்தி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனங்களை எழுதுவதுடன், கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவரது எழுத்துப்பணிகள் திரைப்படத்துக்கு வலுவூட்டும் முக்கிய காரணியாக இருக்கிறது.

"மாரீசன்" திரைப்படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசிலுடன் இணைந்து விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா, மற்றும் பல முக்கிய நடிகர்களும் பணியாற்றியுள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தின் கதைக்கேற்ப தேர்வு செய்யப்பட்டிருப்பதால், இந்த படம் ஒரு தனித்துவமான சமூக, அரசியல், நகைச்சுவை கொண்ட கலவையாக இருக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. இப்படத்திற்கு மத்திய திரைப்பட தர வரிசை வாரியம் “யு/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளது. அதாவது, இது குடும்பத்துடன் கூடும் விதமாக இருந்தாலும் சில சிறு அதிரடி காட்சிகள் உள்ளன என்பதைக் குறிக்கிறது.
இப்படி இருக்க, “மாரீசன்” திரைப்படம் வரும் ஜூலை 25ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களிடையே இப்படத்துக்கான ஹைப் ஏற்கனவே அதிகமாகவே இருக்க, படத்தின் இசை மற்றும் டிரெய்லர் அப்டேட்கள் மேலும் ஆர்வத்தை கூட்டி வருகின்றன. இதற்கிடையில், "மாரீசன்" படத்தின் இரண்டாவது பாடல் குறித்த தகவலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று மாலை வெளியாகிறது எஸ்.ஜே.சூர்யாவின் "கில்லர்" படத்தின் பர்ஸ்ட் லுக்...! குஷியில் ரசிகர்கள்..!
அதன்படி, இன்று மாலை 05.04 மணிக்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா தான் பாடியுள்ளார் என்பது மேலும் ஒரு சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரசிகர்களை இசையின் மூலமாக வசியம் செய்த யுவன், இந்த பாடலிலும் தனது குரலாலும் இசையாலும் ஒரு தனிச்சிறப்பை உருவாக்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மாரீசன் யுவன் சங்கர் ராஜா - போஸ்டர் இதோ..
இந்த இரண்டாவது பாடல் படத்தின் உணர்வுப் பின்னணியை வெளிப்படுத்தும் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாமன்னன் வெற்றியைத் தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படம், தமிழ் சினிமாவி அதிக வசூலை பெரும் படமாக பார்க்கப்டுகிறது. இது ஒரு புது முயற்சி, புது கதைக் கோணத்துடன் கூடிய படைப்பாக உள்ளது.

இப்படி ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ஆர்வத்தைக் கிளப்பியுள்ள இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில் உள்ளது.
இதையும் படிங்க: டீசரை டெலிட் பண்ணுங்க முதல்ல..! "பேட் கேர்ள்" படத்திற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!