விடுதலை படத்திற்கு பிறகு காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்ட சூரி, அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடு்த்து ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், கருடன் படத்தை தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான 'மாமன்' படத்தில் நடித்து உள்ளார் . சமீபத்தில் 'மாமன்' படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சூரியை சிவகார்த்திகேயன் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்தார். இதை பார்த்து நெகிழ்ந்து போன சூரி அவரை கட்டியணைத்து வரவேற்றார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வைரலானது.

இந்த சூழலில் அவ்வப்போது இப்படத்தின் போஸ்டர்கள், டீசர், மற்றும் பாடல் ஆகியவை வெளியாகி மக்களை மகிழ்வித்து வருகிறது. அக்கா தம்பியின் பாசத்தை முதன்மையாக கொண்டுள்ள இப்படம், தனது அக்காவுக்கு பிறக்க போகும் குழைந்தைக்கும் சூரிக்கும் உள்ள பந்தத்தை வெளிப்படுத்தும் படமாக உள்ளது. இப்படி இருக்கையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது இந்த மாமன் படம். இப்படி இருக்கையில் இப்படத்திற்கான ஃப்ரமோஷன் நிகழ்ச்சி அதிக இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மகனுக்காக தாய்ப்பாலில் தங்க நகை செய்த இந்திரஜா சங்கர்..! ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்..!

அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 'நிப்ட் டீ கல்லூரியில்' "மாமன்" திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகனான சூரியும், கதாநாயகியான ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டனர். அப்பொழுது அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் உறைந்து போன சூரி, மாணவர்களின் உற்சாகத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து பேசிய நடிகர் சூரி, "நான் எட்டாவது படிக்கும் பொழுது எனது படிப்பை விட்டுட்டு திருப்பூருக்கு வேலைக்காக வந்தேன். அப்பொழுது எனக்கு 14 வயது திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தேன். நிறைய வருமானம் எல்லாம் கிடையாது ஒரு தேங்காய் பண்ணுக்காக தெருத்தெருவாக சுற்றுவேன். அயராது உழைப்பேன். ஆனால் இன்று அதே திருப்பூரில் எனக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்து கௌரவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என கண்கலங்க பேசினார்.

மேலும், தொழிலாளர்களால் உயர்ந்த ஊர் தான் இந்த திருப்பூர். இங்கு தொழிலாளியாக இருந்த பல பேர் இன்று முதலாளியாக அமர்ந்து உள்ளனர். உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் திருப்பூர் ஆடைகளையே மக்கள் விரும்பு உடுத்தி வருகின்றனர். அதுதான் நமக்கு பெருமையும் கூட. அதேபோல் என்னையும் வளர்த்தது இந்த திருப்பூர் தான். இங்கு தான் உழைத்தேன். தொழிலை கற்றுக்கொண்டேன். அனைத்து இடங்களுக்கும் சென்றேன். இன்று ஏதோ எளிதாக இந்த இடத்திற்கு வரவில்லை. கடின உழைப்பு, அவமானங்கள் அனைத்தையும் கடந்து வந்துதான் இங்கு நிற்கிறேன். ஆனபடியால் எனக்கு வாழ வழி செய்த திருப்பூருக்கு பெருமை சேர்க்கும் விதமாக எனது படத்தின் ப்ரிரிலீஸ் இங்கு செய்யப்படுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது". என கூறினார்.
இதையும் படிங்க: கச்சேரி பணம் ராணுவத்துக்குத்தான் ஆனா கச்சேரி மட்டும் இப்ப இல்லப்பா.. இளையராஜாவின் பிளான்..!